• May 20, 2024

Month: October 2023

கோவில்பட்டி

தமிழ்நாடு ஆக்கி , ஹேண்ட்பால் அணிக்கு நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ளும் 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஆக்கி அணியின் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதே போல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு ஹெண்ட்பால்  அணியின் தேர்வு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டதில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஆக்கி அணி மற்றும்  ஹேண்ட்பால் அணிக்கு  கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்  நவிநேஸ்வரன் தேர்வு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை 

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி  பூஜை நடைப்பெற்றது.  ஸ்ரீ வெற்றி விநாயகரருக்கு மஞ்சள்,  பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதற்கான பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இந்த பூஜையில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் […]

கோவில்பட்டி

பாண்டவர்மங்கலம் ஊராட்சி கிராமசபை கூட்டம்

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து , கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, ராஜீவ்  நகர் இ.பி. காலனி பகுதிக்கு  அடிப்படை வசதிகல் வேண்டி அதற்கான  கோரிக்கைகளை வழங்கினார். அவருடன்  ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண […]

ஆன்மிகம்

நரசிங்கப் பெருமாளை சரணடைவோம், நன்மை பெறுவோம்…!

நரசிங்கப் பெருமாளே. .. நீ ஒருவன் என்னைக் காக்க வேண்டும் என முடிவு செய்து அடியேனைக் காக்க முற்பட்டுவிட்டால், அடியேன் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. நீ காக்கக் கூடாது என முடிவெடுத்து விட்டாயானால், அடியேன் வேறு தெய்வங்களை நாடுவதில் எந்தப் பலனும் இல்லை. வேகவதிக் கரையில் எழுந்தருளி இருக்கும் உன்னையே எந்நாளும் சரணடைகிறேன்”என்று ஸ்வாமி தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் நரசிம்மரைக் கொண்டாடுகிறார். லட்சுமி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.தன்னைச் […]

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவில் பல்லக்கு தூக்கிகள்: ஆச்சரிய தகவல்கள்

ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமியின் பல்லக்குக்கு ‘தோளுக்கினியான் ‘ என்ற பெயர்உண்டு. பல்லக்குத் தூக்கிகளுக்கு‘ஸ்ரீ பாதம் தாங்கிகள் ‘ என்று பெயர் . பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம். அப்பாங்கை கருடகதி என அழைக்கிறார்கள். அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல […]

கோவில்பட்டி

அ.தி.மு.க. பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் 32,33வது வார்டு மற்றும் புது கிராமம் பகுதியில் உள்ள பூத்துக்கான முகவர்கள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கிளைச் செயலாளர்கள் மகேஷ் பாலா, சரவணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட […]

கோவில்பட்டி

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று (நேற்று) தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.  தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் இரா.பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ் ஆகியோர் தூத்துக்குடி பகுதியிலும், உதவி ஆய்வாளர் பெ.சூரியன் கோவில்பட்டியிலும், உதவி ஆய்வர் ஜோதிலட்சுமி திருச்செந்தூரிலும், சு.சங்கரகோமதி ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும்  திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது […]

தூத்துக்குடி

33 கிராம ஊராட்சிகளில் 80 தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி பொது பெயர்கள்;

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் , சாதி, மத மற்றும் சமூக பாகுபாடின்றி அரசின் திட்டங்கள், சலுகைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பல நிகழ்ச்சிகளில் சுட்டிக்காட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அதன் தெருக்களின் பெயர்கள் சாதிய அடையாளங்களுடன் இருப்பதை தொடர்ந்து மேற்படி சாதிய அடையாளங்களை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய […]

கோவில்பட்டி

வேம்பார் முதல் பெரியதாழை வரை 15 லட்சம் பனை விதைகள் நடும்பணி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து  1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் தொடக்க விழா   தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது. மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை […]

தூத்துக்குடி

மாநில தரைபந்து போட்டி:  தூத்துக்குடி மாவட்ட பெண்கள் அணி 2,3-வது இடங்கள் பிடித்து

கன்னியாகுமரி மாவட்டம் நீர்வகுழியில் உள்ள  செயின்ட் ஜூட்ஸ் உயர் தொழில்நுட்ப பள்ளியில் 17வது மாநில தரைபந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் தனித்தனியாக  நடைபெற்றன. இப்போட்டிகளின் நிறைவில்  தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக 19 வயது பெண்கள் அணி இரண்டாம் இடமும்.14 வயது பெண்கள்  அணி மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.  வெற்றி பெற்ற அணிகளின்  வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக தலைவர் டாக்டர்.ஶ்ரீவெங்கடேஷ் தலைமையில் […]