காமநாயக்கன்பட்டியில் விண்ணேற்பு பெருவிழா; ஆகஸ்டு 6 தொடக்கம்
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது.
கத்தோலிக்க விசுவாச பயணத்தில் 422 ஆண்டுகளை கடந்து மறைபணித்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்டு 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.
6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. அன்றையை தினம் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது.
7-ந்தேதி மாலை 6.3௦ மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 13-ந் தேதி இரவு 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடைபெறுகிறது.
14-ந் தேதி மாலை 6.3௦ மணிக்கு மாலை ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது
15-ந் தேதி திருவிழா திருப்பலிகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி:- பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி.
காலை 6 மணி திருப்பலி :- பாளையங்கோட்டை சமூக தொடர்பு பணியகம் செயலர் ஐ.மைக்கேல், மறை மாவட்ட பொறியாளர் ராபின்,
காலை 8 மணி திருப்பலி:- அம்பாசமுத்திரம் பங்குதந்தை அருள் அம்புரோஸ், பாளை மறைவட்டம் திட்ட அலுவலர் தீபக் மைக்கேல்ராஜ்.
காலை 1௦ மணி திருப்பலி:- மண்ணின் மைந்தர்கள் பிரான்சிஸ் வியாகப்பன், சகாயதாசன், அந்தோணிசாமி, வியாகப்பராஜ், யூதா போஸ்கோ,பெஞ்சமின், ஜான் கென்னடி, அந்தோணிராஜ், ஞானப்பிரகாசம், சூசை செல்வராஜ், கில்பர்ட், ஜோசப், எட்வின்ராஜ், கிலாட்வின்.
நண்பகல் 12 மணி திருப்பலி:- தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட், தூத்த்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பங்குதந்தை ஜெரோசின் ஏ.கத்தார்.
பிற்பகல் 2 மணி மலையாளத்தில் திருப்பலி:- பாட்டாக்குறிச்சி குமானவர் இல்ல அதிபர் ஜே கல்லறக்கல்
மாலை 4 மணி இந்தியில் திருப்பலி:- வாரணாசி பிரான்சிஸ் வியாகப்பன்
மாலை 6 மணி திருப்பலி, நற்கருணை பவனி-பாளையங்கோட்டை புனித சவேரியார் கலைமனைகள் சேசுசபை அருட் தந்தையர்.
அன்றைய தினம் இரண்டு பெரிய ரதங்கள் ஊர்வலம் நடக்கும். மக்கள் வெள்ளத்தில் ரதங்கள் பவனி வரும்.
திருவிழா நாட்களில் திருத்தல இணையதளம் www.parlogamadha.com.மூலம் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யபப்டும்.
மாதத்தின் கடைசி சனிக்கிழமை நண்பகல் திருப்பலி ஆயர் தலைமையில் நிறைவேற்றப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் இன்றி திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் லட்சக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16-ந்தேதி மாலை 7 மணிக்கு திருச்சி கலைகாவிரியின் அன்பின் அபிநயங்கள் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.