கோவில்பட்டியில் நேற்று 1௦7 மி.மீ.மழை
![கோவில்பட்டியில் நேற்று 1௦7 மி.மீ.மழை](https://tn96news.com/wp-content/uploads/2022/09/f2bbdc55-b16a-4a46-a386-dd672a7c5d59-850x454.jpg)
கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் திடீரென கன மழை கொட்டியது.
நகரில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. வாகனனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
நேற்று ஒரு நாளில் மட்டும் கோவில்பட்டியில் 1௦7 மி.மீ.மழை அளவு பதிவாகி இருந்தது. கழுகுமலையில் 17, காடல்குடியில் 16, ஸ்ரீவைகுண்டத்தில் 14.1, ஓட்டப்பிடாரத்தில் 2 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. தூத்துக்குடி உள்பட முக்கிய ஊர்களில் மழை இல்லை.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)