• May 19, 2024

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்கள்

 விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்கள்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்கள் ஏதோ ஒன்று கூட அனைத்து பலன்களும் தரும். இருப்பினும் எந்தெந்த நாமங்கள் விசேஷமாக என்னென்ன பலன்கள் தரும் என்பதை காண்போம்…
*வாசுதேவ, அச்சுத, அநந்த, ஸத்ய, அஜ புருசோத்தம, பரமாத்ம, ஈஸ்வர, என்ற நாமம் கீர்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும்
*தர்மக்ருத்,தர்மகுப்,தர்மீ,தர்மாத்மா,விச்வக்ருத்,சுசி,சுசிஷத், விஷ்ணு,யக்ஞாங்,புஷ்கராக்ஷ, அதோக்ஷஜ,சுசிச்ரவா,சிபிவஷ்ட,யக்ஞேச யஞ்யவாஹன என்ற நாமத்தை சொல்வதால் சிறந்த தர்ம பலனை அடையலாம்.
*ஸீதரா,ஸீச ஸீநிவாச, ஸீநிகேதன், ச்ரியபதி ,ஸீதா, ஸீதர, ஸீமந், ஸீவத்சல்ஞ்சன, ந்ருசிம்ம, துஷ்டசமன,ஜய, விஷ்ணு, த்ரிவிக்ரம- இதை சொல்வதால் செல்வம் பெருகும்
*காம,காமப்ரத,காந்த,காமபால, ஹரி,, ஆனந்த,மாதவ என்று சொல்வதால் ஆசைகள் நிறைவேறும்
*இருடிகேசா என்பதால் அனைத்து கண் வியாதிகளும் குணமாகும்
*திரிவிக்ரம என்றால் ஜெயம் உண்டாகும்
*புருசோத்தம என்றால் வித்யா கை கூடும்
*தாமோதர என்றால் பந்தம் நீங்கும்
*கேசவ, புண்டரி காட்ச,அச்சுத,அம்ருத, என்ற நாமம் மருந்து உண்ணும் போது சொல்ல வேண்டும்
*ப்ராஜிஷ்ணு,அக்னி,பானு, நாமங்களை சொன்னால் அவசர கால உதவி கிடைக்கும்
*அபராஜித என்றால் யுத்தத்தில் வெற்றி உண்டாகும்
*பாதாளத்தில் நரசிம்ம எனவும் ஜலத்தில் வராகா எனவும் ‌திக்விஜயத்தில் சக்ரீ,கதீ,சார்ங்கீ,கட்கீ, என்றும் கூற வேண்டும்
*அஜித,ஸர்வ,சர்வேச்வர,புருஷ, வ்யவகாரங்களில் எண்ண வேண்டும்
*வழுக்கினாலும் விழுந்தாலும் தூங்கினாலும் நாராயண என சொல்ல வேண்டும்
*க்ரஹசாரம், பீடை, வனவாசம்,விரோதிகளால் கஷ்டம்,காம பாதை,சிங்கம் புலி முதலிய சங்கடம் நரசிம்மா என கூற வேண்டும்
*தாகமெடுத்தால் ஜல சாயீ என்றும் விஷம் நீங்க கருடத்வஜ என்றும் கூற வேண்டும்
*ஸ்நானம்,பூஜை,ஹோமம்,ப்ரதட்சணம், முதலானவற்றில் வாசு தேவா என்று சொல்ல வேண்டும்
*பணத்தை பெட்டியில் வைக்கும் போது தாண்யத்தை குதரில் வைக்கும் போது அநந்த அச்சுத என்று சொல்ல வேண்டும்
*துஷ்ட சொப்பனம் கண்டால் நாராயண சார்ங்கதா ஸீதரா புருசோத்தமா வாமனா கல்கீ என்று சொல்ல வேண்டும்
*தீயாள் வீடு எரியும் போதும் ஜலத்தில் பள்ளி கொண்டானை நினைக்க வேண்டும்
*மந்தபுததி மந்திரத்தில் மயங்கி உள்ளவன் பிறறால் புத்தி கெடுக்க பட்டவன் ஹயக்ரீவா என கூற வேண்டும்
*பல ராமா என்றால் விவசாயம் பெருகும்
*ஜகத் பிதா என்றால் புத்திர பாக்கியம் லயிக்கும் ஸீசனை என்று கூறினால் தம்பதிகள் விவாகத்தில் மங்களம் உண்டாகும்
*காற்று வெயில் தீ ஜலம் சிறைவாசம் மரணம் முதலிய நேரத்தில் அசோகா என்றால் சோகம் தீரும்
இப்படி ஹரி நாமம் எல்லா இடங்களிலும் நேரங்களில் சொல்ல தக்கது
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *