• May 17, 2024

வணிக நோக்கத்தில் அமைக்கப்பட்ட 5 ஆழ்குழாய் கிணறுகளுக்கு `சீல்’ வைப்பு ;

 வணிக நோக்கத்தில் அமைக்கப்பட்ட 5 ஆழ்குழாய் கிணறுகளுக்கு `சீல்’ வைப்பு ;

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி இயங்கியதாக ஏற்கனவே தடைசெய்து சீல் வைக்கப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரப்பட்டது.
இதில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்திட கோரி 25.7.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் வழங்கிய மனுவின் மீது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் சர்வே எண் 295/2, 295/4, 25/3, 284/2டீ3 ஆகிய பகுதிகளில அனுமதியின்றி செயல்பட்டு வந்த 5 ஆழ்துளாய் கிணறுகளின் செயல்பாடுகள் நேற்று துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன் (கி.ஊ),ராமராஜ் (வ.ஊ), தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் சாயர்புரம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா, சேர்வைக்காரன்மடம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி செயலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *