• May 8, 2024

வீட்டு வாசலில் கோலம்…. முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க!

 வீட்டு வாசலில் கோலம்…. முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க!

பெண்கள் தினமும் வீட்டிற்கு முன்பு சூரியன் உதிப்பதற்கு முன்பாக நீர் அல்லது சாணம் தெளித்து பின்னர் கோலம் போடுவார்கள்.
அவ்வாறு கோலம் போடுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பொதுவாக தமிழர்களாகிய நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கிடைக்கும் சூரிய உதயத்திற்கு முன் இருக்கக்கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராணவாயு அதாவது ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது.

குனிந்து கோலமிடுதல், பெருக்குதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக இருக்கிறது. தலையை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை கொடுக்கிறது.

பசு சாணத்தாலோ அல்லது தண்ணீராலோ வீட்டு வாசலில் தெளிக்கும்போது வாசலில் உள்ள கிருமிகள் நீங்கி விடும்.

நம்முடைய இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருகிறார்கள் என்பாது ஐதீகம். இதனை அறிய மிகுந்த வரவேற்பு அளிக்கும் ஒரு மங்கள சின்னமாக தமிழர்களின் வாழ்க்கை முறையில் இருக்கிறது.

அதிலும் மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம் தர்மம் செய்வது மாதிரியாக இருக்கிறது.

அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல் உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.
கோலமிடும்போது கவனிக்க வேண்டியவை:
*வலது கையால்தான் கோலமிடவேண்டும். இடதுகையால் கோலமிடக்கூடாது.
*ஆள்காட்டி விரலைத் தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிடவேண்டும்.
*குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது.
*தெற்கு திசையை நோக்கியோ, அல்லது தெற்கு திசையில் முடியும்படி கோலமிடக்கூடாது.
*வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது.
*சுபதினங்களில் ஒற்றைக்கோடுகளில் கோலம் இருக்கக்கூடாது. இரட்டைக் கோடுகளாகத்தான் இருக்க வேண்டும்.
*தெய்விக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டுவாசலில் போடக் கூடாது.
*தெய்விக யந்திரங்களைக் குறிக்கும் ஹ்ருதய கமலம், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் , நவகிரக கோலங்கள், போன்றவற்றை பூஜை அறைகளில் மட்டும்தான் போடவேண்டும். இதை அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும்.
*அமாவாசை மற்றும் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யும் நாள்களில் கோலம் போடக்கூடாது.

எந்தெந்த நாள்களில் எந்த கோலமிடவேண்டும்?
ஞாயிறு – சூரியக்கோலம், செந்தாமரை கோலம்
திங்கள் – அல்லிமலர் கோலம்
செவ்வாய் – வில்வ இலைக்கோலம்
புதன் – மாவிலை கோலம்
வியாழன் – துளசிமாட கோலம்
வெள்ளி மற்றும் பவுர்ணமி – தாமரைக் கோலம் (எட்டு இதழ்)
சனி – பவளமல்லி கோலம்.

கோலமிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

*இல்லங்களில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

*துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது.

*அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

*சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமைகொண்டது.

*கோலத்தின் 8 பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

*சாணமிடுவது கிருமிநாசினியாக செயல்படும்.

*மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனைத் தொழுவது, உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *