• May 19, 2024

மீட்கப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட பெண்  20 மாத சிகிச்சைக்கு பிறகு அடையாளம் தெரிந்தது ; குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

 மீட்கப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட பெண்  20 மாத சிகிச்சைக்கு பிறகு அடையாளம் தெரிந்தது ; குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் கடந்த 24/09/2022 அன்று திருச்செந்தூரில் ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு பணி நடைபெற்றது.

மீட்பு பணியின் போது வேலுத்தாய் (வயது 42) என்ற பெண் மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

அதன் பின் முடுக்குமீண்டான்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மன நல காப்பகத்தில் சேர்த்து மருத்துவ வசதி தங்கும் வசதி செய்து தரப்பட்டது, இதை தொடர்ந்து 20 மாதம் சிகிச்சைக்கு பிறகு குணமாகி தெளிவான முகவரி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மேல இலந்தை குளம், சமுத்திர செல்வ பாண்டி மனைவி என்றும் , மகள் சரண்யா, மகன் அருண்குமார், இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி காப்பக நிர்வாகி தேன் ராஜா  மேல இலந்தை குளம் சென்று கள ஆய்வு செய்ததில் உண்மை என தெரிய வந்தது. மகள் சரண்யா கோயம்புத்தூரில் படித்து வருவதும் கணவர் வெளிநாட்டில் இருப்பதும் தெரிய வந்தது, கணவர் 28/04/2024 அன்று இந்தியா வந்ததும், இன்று 05/05/2024 மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆலோசனையின் பேரில் கோவில் பட்டி காவல் துணை கண் காணிப்பாளர் வெங்கடேஷ் முன்னிலையில் வேலுத்தாய் அவரது மகள் சரண்யா, மகன் அருண் குமார், கொழுந்தன் கணேசன்,முன்னிலையில் ஆக்டிவ் மைண்ட்ஸ் நிர்வாகி தேன் ராஜா ஒப்படைத்தார்,

    நிகழ்வில்ஆக்டிவ் மைண்ட்ஸ் மன நல காப்பக செவிலியர் பு)வனேஸ்வரி, மேற்பார்வையாளர் மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *