• May 19, 2024

வெளி மாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு

 வெளி மாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு

தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கட்டிட வேலை, ஓட்டல், விடுதி, இறால் பண்ணைகளில் வேலை பார்க்க அதிகம் பேர் வருகின்றனர்.
இது போல் தமிழகத்தில் எத்தனை பேர் வெளி மாநிலத்தவர் உள்ளனர் என்ற சரியான தகவல் இல்லை. எனவே தற்போது முக்கிய நகரங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக அந்தந்த நகராட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குறிப்பிட்ட நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள், கட்டிட காண்டிராக்டர்கள், மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் வைத்து தொழில் செய்பவர்கள், உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்ககளை நகராட்சி அலுவலகத்தில் வருகிற 15.6.22 க்குள் உடனடியாக சமர்ப்பித்தது பதிவு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்,
ஆவணங்கள்
*பெயர்
*வயது
*புகைப்படம்
*ஆதார் அட்டை
*கைப்பேசி எண்
*தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர்
*தற்போதைய முகவரி
*நிறுவனத்தின் உரிமையாளர் பெயர்
*நிறுவன உரிமையாளரின் ஆதார் எண் \
*கைப்பேசி எண்
*தற்போதைய இருப்பிட முகவரி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *