• May 11, 2024

மரத்தில் பஸ் மோதியதில் காயமடைந்த மாணவிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்

 மரத்தில் பஸ் மோதியதில் காயமடைந்த மாணவிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் தனியார் கல்லூரி பஸ், நேற்று காலை மாணவிகளை எத்ரிக்க்லோண்டு கல்லூரிக்கு சென்றபோது மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 26 மாணவிகள் காயமடைந்தனர். அவரகள் மீட்கப்பட்டு மதுரை, விருதுநகர்,
சாத்தூர் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்நிரன், காயமடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து மருத்துவர்கள் மற்றும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்:
, விபத்து ஏற்பட்டவுடன் அரசு அலுவலர்களை துரிதப்படுத்தி விபத்து நடந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்ததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் மருத்துவ செலவை கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு ஏற்றுக்கொள்ளும்.
காயமடைந்த மாணவிகளுக்கு நிவரானம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சருடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, சாத்தூர் நகர்மன்றத் தலைவர் குருசாமி ,ஒன்றிய குழு தலைவர் நிர்மலா ஆகியோர் சென்று இருந்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *