கோவில்பட்டி இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டி இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி. இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் உத்தண்டராமன் மற்றும் அந்த பகுதியினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்புகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தனி வட்டாட்சியரை சந்தித்து வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-

தியாகி லீலாவதி நகர், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்டு, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள தியாகி லீலாவதி நகருக்கு அடிப்படைகள் தேவைகள் செய்துதரக்கோரி கடந்த 25-11-2024ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதேபோன்று இதுநாள்வரை கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுநாள்வரை மேற்படி எங்களது மனுக்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே தியாகி லீலாவதி நகர் பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா வைத்திருக்கும் நபர்களின் பெயர்களை உடனடியாக இ-பட்டாவில் சேர்த்திட வேண்டும். மேற்படி நபர்கள் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகைக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவும், மேலும் வீடு இல்லாத நபர்களுக்கு மத்திய மாநில அரசின் மானியங்களுடன் இலவச வீடு வழங்கவும்  உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *