மகாராஜா’ படத்தை நிராகரித்தேனா? சாந்தனு விளக்கம்
![மகாராஜா’ படத்தை நிராகரித்தேனா? சாந்தனு விளக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2024/08/nithilan210824_1-850x560.jpg)
இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நான் ஆரம்பத்தில் ஒரு கதையை பல நடிகர்களிடம் கூறினேன், குறிப்பாக சாந்தனு என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவரே சில தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். ஆனால் அந்த படம் உருவாகவில்லை.
அதன் பிறகு தான் நான் ’குரங்கு பொம்மை’ இயக்கினேன். மேலும் சாந்தனுவுக்கு கூறிய கதையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு இயக்கிய படம் தான் ’மகாராஜா’ என்று கூறினார்.
இதுகுறித்து சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:-
, ‘மகாராஜா திரைப்படத்தின் மூலம் நிதிலன் உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிட்டது உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் என்னுடைய பெயரை குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.
மேலும் ’மகாராஜா’ ஸ்கிரிப்ட்டை நானும் என் தந்தையும் நிராகரித்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உண்மையில் நிதிலன் என்னிடம் கூறிய கதை குறித்து என் தந்தைக்கு தெரியாது. ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை, இருந்தாலும் அந்த படத்தின் கண்டன்ட் இன்று மகாராஜா ஆகியுள்ளது.
நான் இப்போதும் சிறந்த ஸ்கிரிப்டுகளை தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் அளிக்க வேண்டும்’.
இவ்வாறு சாந்தனு கூறி உள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)