• May 20, 2024

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திராவும், கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய கோவில்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்புராஜ் தலைமை தாங்கினார், கோவில்பட்டி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்களிப்பின் முக்கியத்துவம் பற்றியும், புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றியமைத்தல் போன்றவற்றை இணையதளம் வாயிலாக எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா  இசக்கி   நோக்கவுரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் விஜயன், முத்துக்குமார்,  மாவட்ட வள பயிற்றுனர் ஆறுமுகம், சமூக நல ஆர்வலர் ஈஸ்வரன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர்.  மாணவ மாணவிகளுக்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஹேமலதா வரவேற்று பேசினார். 

தொடர்ந்து நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ்  மற்றும் குழுவினர்  நடுவர்களாக பணியாற்றினர்.

4 குழுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கபடி போட்டியும் , கைப்பந்து போட்டியும்,பெண்கள் பிரிவில் கயிறு இழுத்தல்,ஒற்றைக்கால் ஆட்டம்  ஆகிய போட்டிகள்  நடத்தி  அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முடிவில் கல்லூரி  வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதாராணி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் ஆலோசனையின் பேரில் நேரு யுவ கேந்திரா இசக்கி மற்றும் தேசிய இளையோர் தொண்டர்கள் பிரியங்கா, தனலட்சுமி, மற்றும் அனைத்து கல்லூரி உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்

.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *