• May 20, 2024

வாக்குசாவடி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 வாக்குசாவடி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில்  மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசுகையில் திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி,வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்,

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம்,விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி,ஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்தாய் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *