• May 20, 2024

மகிழ்வோர் மன்ற கூட்டம் : 1330 திருக்குறள்கள் ஒப்புவித்த மாணவர்களுக்கு விருது

 மகிழ்வோர் மன்ற கூட்டம் : 1330 திருக்குறள்கள் ஒப்புவித்த மாணவர்களுக்கு விருது

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 75வது மாதாந்திர கூட்டம் என் கே மஹாலில் நடந்தது. 

கூட்டத்தின் போது 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. 1330 குறள்களை ஒப்புவித்த சிப்பிபாறை அரசு பள்ளி மாணவர் அன்புராஜ், கொப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்விதா ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர்  கவிஞர் சிவானந்தம் எழுதிய முண்டாசு கவிஞர் பாரதி எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு நெல்லை டான் அரிமா சங்க செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். கோவில்பட்டி எஸ்எஸ்டிஎம் கல்லூரி உதவிபேராசிரியர் கற்குவேல்ராஜ் முன்னிலை வகித்தார்.

மகிழ்வோர்மன்ற காப்பாளர் துரைராஜ் அனைவரையும் வரவேற்றார்.

முண்டாசு கவிஞர் பாரதி எனும் நூலை மகிழ்வோர் மன்ற காப்பாளர் மோகன்ராஜ் அறிமுகம் செய்து நெல்லை ஜெயந்தா வெளியிட விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் அருண் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து கவிஞர் நெல்லை ஜெயந்தா  மாணவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கண்ணதாசனும் வாலியும் என்ற தலைப்பில் பேசினார்.

நெல்லை கவிஞர் பேரா, மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தலைமையாசிரியர்கள் மணிமதி, கணேசன், மேனாள் கூட்டுறவு வங்கி மேலாளர் சங்கர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பூல்பாண்டி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மகிழ்வோர் மன்ற காப்பாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *