• May 20, 2024

கோவில்பட்டியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வலுக்கும் கோரிக்கை 

 கோவில்பட்டியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வலுக்கும் கோரிக்கை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்து நிறுத்தப்பட்ட கால்நடைச் சந்தையை மீண்டும் செயல்படுத்திட நகர்மன்றத் துணை தலைவர் ரமேஷ் இடம் மனு வழங்கப்பட்டது.

ராஜா தலைமையில் கணேசமூர்த்தி ரத்தினவேல் அயன் சேகர் ஆகியோர் முன்னிலையில் நேதாஜி பாலமுருகன் மனு வழங்கினார் இதில் பரமசிவ பாண்டியன் கிருஷ்ணசாமி உட்பட பல கலந்து கொண்டனர் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-

 கோவில்பட்டியில் சுற்று வட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு கோவில்பட்டி நகரில் வாரந்தோறும் திங்கள் கிழமை வார சந்தை இப்போதுள்ள உழவர் சந்தையில் நடைபெற்று வந்தது. அதைபோல் இளையரசனந்தல் பகுதி சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாரச்சந்தை நடைபெற்று வந்தது.

 ஆடு மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் இச்சந்தை மூலமாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது இதன் மூலமாக நகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைத்தது.

ஆனால்  சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென வாரச்சந்தை நிறுத்தப்பட்டது இதனால் கோவில்பட்டி பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் எட்டியாபுரம், கயத்தாறு அல்லது நெல்லை மேலப்பாளையம் சந்தைகளுக்கு சென்று கால்நடைகளை விற்பனை செய்யவோ அல்லது வாங்க வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கால விரயம் பண விரயம் ஏற்பட்டு திரு மன உளைச்சலுக்கு விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு மீண்டும் கோவில்பட்டி நேதாஜி பெயரை செயல்பட்டு வந்த வார சந்தையை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *