• May 20, 2024

விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி; பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை  

 விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி; பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை  

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று காலை மரணம் அடைந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த விஜயகாந்த் மரணம் அடைந்ததை தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

விஜயகாந்த்  உடலை கண்ணாடி பேழையில் வைத்து அவருக்கு வெட்டி, சட்டை, கண்ணாடி அணிவித்து உடல் மீது தேமுதிக கட்சி கொடி  போர்த்தப்பட்டது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை உலகினர் பலர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை தொடர்ந்து விஜயகாந்த் உடல் வேனில் ஏற்றப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதி க கட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது, வழிநெடுக பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். கட்சி அலுவலகத்தில் ஒரு மேடை அமைத்து விஜயகாந்த் உடல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபப்ட்டது.

பொதுமக்கள், தேமுதிவினர், ரசிகர்கள் , திரை உலகினர், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் வந்து விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள், பொதுமக்கள் சென்னைக்கு படைஎடுத்தனர்.

இதனால் கோயம்பேடு பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் விஜயகாந்த் உடலை  தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அதற்கான அனுமதி பெறப்பட்டது.

அஞ்சலி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. மேடை அமைக்கபப்ட்டது. மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்து வரிசைகள் ஏற்படுத்தப்பட்டன. தீவுத்திடலை சுற்றி மாநகராட்சி சார்பில்  15 இடங்களில் தற்காலிக கழிப்பறை வாகனங்கள நிறுத்தப்பட்டன, மேலும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு  மெரினா கடற்கரை, பல்லவன் சாலை, சிவானந்த சாலையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது.

இன்று காலையில் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இருந்து  விஜயகாந்த் உடலை ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ தீவுத்திடல் நோக்கி வேன் புறப்பட்டது. வழிநெடுக சாலையின் இருபுறமும் கூடி இருந்தவர்கள் விஜயகாந்த் உடல் இருந்த வேனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

விஜயகாந்த் உடல் அருகே பிரேமலதா மற்றும் குடும்பத்குடும்பத்தினர்
ரஜினிகாந்தல் ஆறுதல்
குஷ்பு , சுந்தர் சி அஞ்சலி
பாக்கியராஜ் ஆறுதல்
நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்
பணிக்கு இடையே அஞ்சலி செலுத்தும் போலீசார்
துப்புரவு பணியாளர்களின் அஞ்சலி

ஒரு மணிநேர கண்ணீர் பயணத்துக்கு பிறகு வேன் தீவுத்திடலை அடைந்தது. விஜய்காந்த் உடல் இருந்த கண்ணாடி பேழை இறக்கப்பட்டு மேடையில் சாய்வான நிலையில் கண்ணாடி பேழை வைக்கப்பட்டது. மேடையில் விஜயகாந்த் உருப்படத்துடன் பேனர் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இந்த விஜயகாந்த் வாழ்ந்தான் வாழ்ந்தான் மக்களுக்காகவே வாழ்ந்தான் என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

விஜயகாந்த் உடல் தீவுத்திடல் வருவதற்கு முன்பாகவே அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்தனர். அவர்கள் முகத்தில் சோகம் சூழ்ந்து இருந்தது. பலர் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.
மேடையில் கண்ணாடி பேழை அருகே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன் விஜயபிரபாகரன்,  மற்றும் மைத்துனர் எல்.கே,.சுதீஷ், தேமுதிக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

 தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்கள் விஜயகாந்த் உடல் இருந்த கண்ணாடி பேழையை தொட்டு வணங்கி சென்றனர்.

பொதுமக்கள் செல்வத்தற்கு தனி பாதையும், அரசியல் கட்சி தலைவர்கள் , முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்த தனி வழி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. 4 கூடுதல் ஆணையர்கள், 5 இணை ஆணையர்கள், 9 துணை ஆணையர்கள் மேற்பார்வையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பல்லவன் சாலை முதல் தீவுத்திடல்  வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் கூட்டம் இருந்ததால் பாரிமுனையில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வழியாக  வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

தீவுத்திடலில் முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு வசதியாக 100 சேர்கள், பொதுமக்கள் வசதிக்காக 1௦௦௦ சேர்கள் போடப்பட்டு இருந்தன. தீவுத்திடல் நோக்கி வந்தவர்கள் மனதில் விஜயகாந்த் உடலை ஒருமுறை பார்த்து விடமாட்டோமோ என்ற ஏக்கம் தென்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு நேற்றை போலவே இன்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா, அவரது மகன்கள் இருவருக்கும் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வசதியாக மேடை அருகே தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு ரஜினிகாந்த் சென்று பேசினார்.” விஜயகாந்த் மன  உறுதி கொண்ட மனிதர். உடல்நலம் தேறி  வந்து விடுவார் என்று நினைத்தேன். அவர் இருந்திருந்தால்தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்” என்று குறிப்பிட்டார்.

இயக்குனர்கள் பாக்கியராஜ், பார்த்திபன், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர், சாந்தனு  உள்பட பலர், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் பேசுகையில், விஜயகாந்த் செய்த மனிதநேய பணிகள் தொடரவேண்டும், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

நடிகை குஷ்பு, விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டார். அவர் விஜயகாந்த் பற்றி கூறுகையில், பாக்கியராஜ் சொக்கத்தங்கம் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். உண்மையிலேயே விஜயகாந்த் சொக்கத்தங்கம் தான்” என்றார்.\

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *