• May 20, 2024

விவசாயம் பாதிப்பால் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் : தூத்துக்குடி ஆட்சியருக்கு விவசாயிகள் சங்க தலைவர் கடிதம்

 விவசாயம் பாதிப்பால் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் : தூத்துக்குடி ஆட்சியருக்கு  விவசாயிகள் சங்க தலைவர் கடிதம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிக்கு தேசிய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு தலைவர் வக்கீல் எஸ். ரெங்கநாயகலுஅனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு போன்ற பகுதிகளில் வானம் பார்த்த கரிசல் பூமியாக உள்ளதால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு 2023-2024 ம் ஆண்டு புரட்டாசி பட்டத்தில் பெய்ய வேண்டிய மழை முற்றிலும் பெய்யாமல் விட்டு விட்டதால் புரட்டாசி பட்டத்தில் லேசான சாரல் மழைக்கு விதைத்த விதைகள் அனைத்தும் சரியாக முளைக்காமல் இரண்டு மூன்று முறை விதைத்த காரணத்தால் மூன்று மடங்கு செலவு ஏற்பட்டுவிட்டது.

இதனால் இந்த ஆண்டு விவசாயத்துக்கு பெறப்பட்ட கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது . சென்ற இரண்டு ஆண்டுகளில் ஓரளவு நல்ல விளைச்சல் பல பகுதிகளில் இருந்த நிலையில் இந்த ஆண்டு (2023-2024) பருவ மழை தாமதத்தாலும் விதைகள் சரியாக இல்லாத நிலையில் போதிய வளர்ச்சி இல்லாமல்  மிக மிக வளர்ச்சி  குன்றிய நிலையில் கதிர் பிடிக்க வாய்ப்பில்லாத நிலை உள்ளது .வளர்ச்சி குன்றிய நிலையில் பிடிக்கும் கதிர்களில் எந்த மணிகளும் இருக்கப்போவது இல்லை.

அதே போல் பருவ    படைப்புழுவை ஓரளவு தாக்கி அழிக்கும் கோராஜென் பூச்சி கொல்லி மருந்தை அளித்து இருக்கவேண்டும். ஆனால் அரசு இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.இதனால் அதிக அளவில் படைப்புழு தாக்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய அளவில் விளைச்சல் இழப்பை விவசாயிகள் சந்திக்க உள்ளார்கள்.

அதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வில் இருண்டு மடிந்து போகாமல் இருக்க,தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் போதிய அளவில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கியும், இந்த ஆண்டு விவசாயிகள் பெற்ற கூட்டுறவு வங்கி பயிர் கடனை முழுமையாக ரத்து செய்தும் தகுந்த நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மேகண்டவாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *