• May 20, 2024

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.32.39 கோடி; ஆட்சியா் செந்தில்ராஜ் தகவல்

 மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.32.39 கோடி; ஆட்சியா் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், மீன்பிடிப்பு குறைவு காலங்களில் மீனவா்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 72 ஆயிரத்து 322 மீனவ குடும்பங்களுக்கு ரூ.41.13 கோடி சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீனவா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 67ஆயிரத்து 607 மீனவா்களுக்கு ரூ.30.43 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீனவ மகளிா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் 71ஆயிரத்து 647 மீனவ மகளிருக்கு ரூ.31.99 கோடி சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தில் 22 மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள், பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் 491 மீனவா்களுக்கு ரூ.1.66 கோடி மானியம், பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகு மற்றும் இதர உபகரணங்கள் வாங்க 42 மீனவா்களுக்கு ரூ.84 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.

மீனவ மகளிருக்கு கடல்பாசி வளா்க்கும் திட்டத்தில் 94 பேருக்கு ரூ.9 லட்சத்து2 ஆயிரத்து 400 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.95 லட்சம் நிவாரண தொகையும், காணாமல் போகும் மீனவா்களது குடும்பத்திற்கு தின உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 21 மீனவா்களுக்கு ரூ.5.96 லட்சம் தின உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 64, 784 மீனவ குடும்பங்களுக்கு ரூ.32.39 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *