• May 9, 2024

முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன்  கோவில் பங்குனி உத்திரம் திருவிழா; ஏப்ரல் 5,6 -ந் தேதிகளில்  நடக்கிறது

 முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன்  கோவில் பங்குனி உத்திரம் திருவிழா; ஏப்ரல் 5,6 -ந் தேதிகளில்  நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தாலுகா  முப்பிலிவெட்டி கண்மாய்க் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வழக்கம் போல் இந்த ஆண்டும் இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதிகளில் விழா நடக்கிறது.5 ந்தேதி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. 9 மணிக்கு இந்து நாடார் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு வருவார்கள்.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அய்யனாருக்கு 16 வகையான அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு கன்னி பூஜை நடக்கிறது.

பின்னர் மாலை 5 மணிக்கு 216 திருவிளக்கு பூஜை நடக்கிறது, இந்த பூஜையில் பெண்கள் கலந்து கொள்வார்கள். இரவு 9 மணிக்கு வான வேடிக்கை நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை கோவில்பட்டி எஸ்.கே.டி.எஸ்.தமிழரசன் & பிரதர்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர்,பின்னர் இரவு 10 மணிக்கு கருப்பசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி தொடங்கும்.

,மயிலேறும் பெருமாள் அய்யனார் சன்னதி

மறுநாள் 6 -ந்தேதி காலை 10 மணிக்கு சக்தி கிடா மற்றும் சேவல் அர்ப்பணித்தல் நடக்கும்,. மதியம் அசைவ சாப்பாடு விருந்து நடக்கிறது.

முந்தைய நாள் பங்குனி உத்திரத்தன்று 3 வேளையும் இந்து நாடார்குல மக்களுக்கு மட்டும் பாத்தியப்பட்ட அறக்கட்டளை சார்பில் அன்னதானம் பரிமாறப்படும்.

இதே போல் அருள்மிகு ஸ்ரீ மயிலேறும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5 -ந் தேதி காலை 9 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்காரம், தீப ஆராதனை நடைபெறும். இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், கும்மி அடித்தல், பாட்டு பாடுதல், விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

6-ந்தேதி காலை 9 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. காலை 10 ,மணிக்கு அம்மனுக்கு சக்தி கிடா, சேவல், முடி காணிக்கை செலுத்துதல் நடக்கும்

யிலேறும் பத்திரகாளி அம்மன் சன்னதி, வெளிப்புறம் புதிதாக நிறுவப்பட்ட துவார சக்திகள்

மயிலேறும் பத்திரகாளி அம்மன் கோவில் மூலவர் சன்னதியின் இருபுறம் காவல் தெய்வங்கள் சிற்பங்கள் நிறுவ , கோவில்பட்டி கைரா டெக்னாலஜிஸ் சார்பில் டி.சிவந்திராஜா -எம்.செல்வலட்சுமி தம்பதியர் ஏற்பாடு செய்தனர்.

இதை தொடர்ந்து பெண் காவல் தெய்வங்களான துவார சக்தி களான ஜெயா, விஜயா ஆகியோரின் 6 அடி உயர சுதை சிற்பம் நிறுவப்பட்டு உள்ளது. 2 அடி உயர பீடத்தின் மீது அமையபெற்றுள்ள இந்த சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது,.

பங்குனி உத்திர திருவிழாவில் கோவில்பட்டி, தூத்துக்குடி, ஏரல் மற்றும் விருதுநகர், மதுரை, திருச்சி, திருத்தணி,சிவகாசி, சென்னை, திருக்கழுக்குன்றம், புதுச்சேரி ,மும்பை போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மயிலேறும் பெருமாள் அய்யனார் தேவஸ்தான தலைவர் எஸ்.தங்கவேல், துணை தலைவர்கள் தம்பிதுரை ,ராமராஜா, செயலாளர் முருகேச பாண்டி, துணை செயலாளர்கள் தர்மராஜ், பாலகிருஷ்ணன்,அய்யனார், பொருளாளர் டி.ரவிச்சந்திரன்  மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *