• May 19, 2024

யார் கதாநாயகன்…?(சிறுகதை)

 யார் கதாநாயகன்…?(சிறுகதை)

ஒரு வீட்டில் ஒரு தந்தை.தினமும் அவர் தன் குழந்தைகளுக்கு இரவில் கதை சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

.அன்றும் அவர் குழந்தைகளை பார்த்து குழந்தைகளே உங்களுக்கு இன்று ஒரு புதிர் கதை சொல்லப்போறேன் என்றார்.

உடனே குழந்தைகள்..என்ன புதிர் கதையா?..எங்களால் கணடு பிடிக்க முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்டனர்.அதற்கு அவர்..பெரிய புதிர் ஒன்றும் கிடையாது.சாதாரண புதிர்தான் .. நகைச்சுவையாக இருக்கும் என்றார்.

அப்படியா சொல்லூங்கள் என்று குழந்தைகள் கதை கேட்க தயாரானார்கள்….தந்தை கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரிலே ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்தது.படப்பிடிப்பில் கலந்துகொள்ள கதாநாயகன் துணை நடிகர்கள் மூன்று பேர் வந்திருந்தனர்.

படப்பிடிப்பு ஆற்றின் மறு  பக்கத்தில் நடந்தது. ஆற்றை கடக்க படகில்தான் செல்ல வேண்டும்.எனவே ஒரு படகில் கதாநாயகன் மற்றும் துணை நடிகர்கள் மூன்று பேர் ஏறினார்கள்./

படகோட்டி படகை ஓட்டிச்சென்றார்.படகு வேகமாக சென்றது.நடு ஆற்றில்வந்த போது படகு தள்ளாடியது.

.படகில் இருந்தவர்களை பார்த்து ஒருபக்கமாக ஒதுங்கி இருக்காதீங்க…சமமாக இருங்கள் என்றார் படகோட்டி.

.அவர் சொன்னபடியே அவர்கள் எழுந்து அமர்ந்தார்கள்.அப்போது படகு கவிழும் நிலைக்கு சென்றது..அதைப்பார்த்த படகோட்டி பதட்டமானார்..படகிலிருந்து யாராவது ஒரு ஆள் இறங்கிட்டா நல்லா இருக்கும் என்றார்..

படகில் இருந்து இறங்கிறதா என்று எல்லோரும் விழித்தனர்.படகோட்டி ஒரு ஆள் இறங்காவிட்டால் படகு கவிழ்ந்து எல்லோரும் மூழ்கிடுவோம் என்றார்

.அதை கேட்டதும் கதாநாயகன் எழுந்தார்.ஒன்றும் கவலைப்படாதீங்க.நான் ஆற்றிலே இறங்கிறேன் என்றார்.மற்றவர்கள் அவரிடம்..நீங்க இறங்காதீங்க என்றனர்..

.ஆனால் அவரோ நான் கதாநாயகன்…படத்தில் இப்படியொரு காட்சி வந்தா நான்தான் எல்லோரையும் காப்பாத்துற மாதிரி நடிக்கணும் என்றார்.மற்றவர்கள் வேண்டாம் என்று தடுத்தனர்.

கதாநாயகனோ…ஒன்றும் கவலைப்படாதீங்க..ஒரு நிமிடம் எல்லோரும் கண்ணை மூடிக்கீங்க..நான் சொன்னதும் கண்ணை திறங்க என்று சொன்னார்.

மற்றவர்கள்..கதாநாயகனாச்சே..ஒரு வேளை ஆற்றிலே குதிச்சு நீந்திவந்துருவாரு என்று நினைத்து கண்களை மூடிக்கொண்டார்கள்.

.அப்போது ஆற்றில் டமார் என்று ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டது..படகில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் கண்களை திறந்து பார்த்தனர்.கதாநாயகன் ஆற்றில் குதித்திருப்பார் என்று பார்த்தனர்.ஆனால் அவர் படகில் சிரித்துகொண்டிருந்தார்.
அப்படியானால் படகில் இருந்து குதித்தது யார்..சொல்லுங்கள் என்று குழந்தைகளிடம் தந்தை கேட்டார்.குழந்தைகள் யோசித்தனர்..

படகோட்டி குதித்து இருக்கமாட்டார்.அவர்தான் படகை ஓட்டவேண்டும்..அப்படியானால் யாராக இருக்கும்..துணை நடிகராகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து துணை நடிகர் என்று சொன்னார்கள்.

அதற்கு அவர்..மூன்று துணை நடிகர்கள் இருந்தார்கள்.அவர்களில் யார் என்று தந்தை கேட்க குழந்தைகள் மீண்டும் யோசிக்கத்தொடங்கினார்கள்.அவர்கள் சிந்தனையில் ஒன்றும் புலப்படவில்லை.

 துணை நடிகர் என்று மட்டும் தெரிகிறது.ஆனால் அவர் யார் என்று மட்டும் தெரியலை என்று கூறினார்கள்.

தந்தை, நான் சொல்லட்டுமா..டூப்பு என்று சொல்லி சிரித்தார்..டூப்பா..புரியலையே என்று குழந்தைகள் கேட்டன..அதற்கு அவர்..கதாநாயகன் மாடியிலிருந்து தாவுறமாதிரி..தீயிலே குதிக்கிறமாதிரி காட்சி வரும்போது கதாநாயகனுக்கு பதில் அவரது டூப்புதான் நடிப்பாங்க..அன்று படகிலே துணை நடிகர்களில் ஒருவர் கதாநாயகனுக்கு டூப்பு போடுகின்றவரும் வந்திருந்தார்.

அவர்தான் கதாநாயகன் குதிக்கிறமாதிரி செய்தபோது அந்த துணை நடிகர் ஆற்றில் உண்மையாகவே குதித்து நீந்திவந்தார் .இதிலிருந்து யார் உண்மையான கதாநாயகன் என்று தெரிகிறதா என்று கேட்டார்.

குழந்தைகள்..ஆமாம்…துணை நடிகர்தான் உண்மையான கதாநாயகன் என்று சொல்லி சிரித்தார்கள்.

வே.தபசுக்குமார்.முள்ளன்விளை.தூத்துக்குடி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *