• May 9, 2024

மினி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்: கோவில்பட்டி கலைக் கல்லூரிக்கு அரசு பஸ் வசதி  அமையுமா?

 மினி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்: கோவில்பட்டி  கலைக் கல்லூரிக்கு அரசு பஸ் வசதி  அமையுமா?

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் இருந்து ஒதுக்குபுறத்தில் கதிரேசன் கோவில் மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கல்லூரி கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்ககளை சேர்ந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

அதே சமயம் இங்கு  பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை…. காலை, மாலை வேளைகளில் அரசு கல்லூரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை..

ஆனால் மினி பஸ் போக்குவரத்து உள்ளது, அதில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றிசெல்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன,

அந்த கல்லூரிக்கு மினி பஸ்சில் செல்லும் மாணவிகளுக்கு சொல்லமுடியாத அளவுக்கு தொல்லைகள்… கொடுக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலுமிஷம் செய்யவே பலர் இந்த பஸ்ஸில் பயணம் செய்கிரார்கள்.

சமீபத்தில் மாணவி ஒருவருக்கு , மினிபஸ் ஊழியர் தன்னை காதலிக்கும் படி தொந்தரவு கொடுத்துள்ளார்… இதனால் அந்த ஏழை  மாணவியின் படிப்பினை அவரது பெற்றோர் பாதியிலேயே நிறுத்தி விட்டனர்,

பஸ்சுக்குள் இருக்கைகள் நிறம்பி நிற்க இடம் இல்லாமல் படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் ஆபத்தான சூழ்நிலையில்  மாணவர்கள் பயணம் செய்வதை காலை மற்றும் மாலை வேளைகளில் காண முடிகிறது,

கல்லூரி முடிந்து மாலையில்  மாணவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் வரிசையயாக நடந்து வருவதையும் காண முடிகிறது, எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்,

அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு கல்லூரிக்கு முக்கிய பகுதிகள் வழியாக செல்லும் வகையில் அரசு டவுன் பஸ்களை  காலை, மாலை வேளையில்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்….

அது மட்டுமல்ல காலை, மாலை வேளைகளில் போலீசாரின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் மாணவிகள் பயமின்றி  கல்லூரிக்கு சென்று வர முடியும்…

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *