• May 20, 2024

ஹீராபென் மரணம்- குஜராத் காந்திநகர் மயானத்தில்  உடல்தகனம்; தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்

 ஹீராபென்  மரணம்- குஜராத் காந்திநகர் மயானத்தில்  உடல்தகனம்; தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து வந்து தாயாரைப் பார்த்துச் சென்றார். அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார்.

ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயர் காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்லவிருந்தார். இந்த நிலையில் தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகர் விரைந்தார். தாயார் ஹீரா பென் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்

மோடியின் தாயார் ஹீரா பென்

பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். மிகவும் இறுக்கமான முகத்துடன் சோகத்தை வெளிப்படுத்தியபடி பிரதமர் மோடி காணப்பட்டார்.

பிரதமர் மோடியின்  தாயார் மறைவுக்கு  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் “பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் “என கூறியுள்ளார்.

தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது”

இவ்வாறு பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *