• May 20, 2024

வானவில் மன்றத்தின் நோக்கம்-தூத்துக்குடி கலெக்டர் விளக்கம்

 வானவில் மன்றத்தின் நோக்கம்-தூத்துக்குடி கலெக்டர் விளக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மானவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்க்துவதற்காக அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதுடன் அதனை திருச்சியில் இன்று நடந்த விழாவில் தொடக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி சி .வா.பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம் தொடக்க விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. அமைச்சர் கீதா ஜீவன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாரு ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்,.


விழாவில் வானவில் மன்றத்தின் நோக்கம் பற்றி கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கி பேசியதாவது:-
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி இந்த வானவில் மன்றம் திட்டமாகும்.
ஸ்டெம் (சயின்ஸ் டெக்னாலஜி என்ஜினியரிங் அண்ட் மேத்தமேடிக்ஸ்) திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் இணைந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக வானவில் மன்றம் செயல்படும். வகுப்பறிவியல் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பாடப் பகுதிகளை எளிமையாகவும் திறமையாகவும் ஆசிரியர்கள் கற்பிக்கவும் மற்றும் மாணவர்கள் எளிதில் கற்கும் முயற்சியில் நிகழ்வுகளை மேற்கொள்வதே வானவில் மன்றத்தின் நோக்கம் ஆகும்.
மாணவர்கள் கேள்வி கேட்பது மற்றும் ஆராய்வதின் மூலம் திறம்பட கற்க வழிவகை ஏற்படுத்துவதே வானவில் மன்றத்தின் நோக்கம் .மாணவர்கள் ஒரே கோட்பாட்டிற்கான ஆய்வுகளை பல்வேறு விதமான மாற்றுக் பொருட்களைக் கொண்டு செய்து கற்கும் அடிப்படையில் கற்றல் திறனை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகும் இத்திட்டம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறிய கலெக்டர் செந்தில்ராஜ், ஒரு குட்டி கதையின் மூலம் மாணவர்களுக்கு எழுச்சி உரையாற்றினார். அதன் விவரம்:
ஒரு ஊரில் பலூன் பறக்க விடும் வியாபாரி ஒருவர் கலர் கலராக பலூன்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். அதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் சிவப்பு. பச்சை. வெள்ளை. என கலர் பலூன்கள் பறப்பதுபோல் அந்த கருப்பு பலூன் பறக்குமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பலூன் வியாபாரி பறப்பதற்கு கலர் முக்கியமல்ல அதனுள் அடைக்கபடும் காற்றே முக்கியமானது, எந்த கலர் பலூனில் காற்றடித்தாலும் அது பறக்கும். என்று பறக்க வைத்து காட்டினார். அந்தக் கேள்வி கேட்ட சிறுவன்தான் கருப்பின மக்களுக்காக பாடுபட்ட அமெரிக்க தத்துவஞானி புக்கர் டி வாஷிங்டன். அவருக்கு அன்றுதான் ஞானம் பிறந்தது. ஜாதியோ, கலரோ, மதமா, சாதிப்பதற்கு முக்கியமல்ல என்று. அதைத்தான் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வானவில் மன்றம் மூலம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். அறிவியல் நடைமுறை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் போது அதன் செயல் விளக்கங்களையும் தெளிவாக எடுத்து மாணவர்களுக்கு கூற வேண்டும். அதன் மூலம் அவர்களை விஞ்ஞானிகளாக மாற்ற முடியும்.
நமது பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரியில் நாசா விஞ்ஞானி சிவன் அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளில் தலை சிறந்த விஞ்ஞானியாக செயல்பட்டவர். மற்றும் நாசாவின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு சந்திராயன் திட்டம் மூலம் நிலவுக்கு ராக்கெட் விட்டவர். மங்கள்யான் சாட்டிலைட் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர். அரசு பள்ளி மாணவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக வரும் நிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.
வானவில் மன்றம் மூலம் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையில் காணப்படும் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரையாடல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் கற்றல் திறனை மேம்படுத்த இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் விரிவுரைகள் பயிற்சி பட்டறை மற்றும் பணிகள் பயிற்சியில் ஆசிரியர்கள் தவறாது கலந்து கொண்டு தங்களின் அறிவு திறனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் D E O,ADPC,APO,DIET,PRINCIPAL AND FACULTIES,STEM DC மேல்நிலை மற்றும் உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் அறிவியல் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகிய கொண்டு குழு அமைக்கப்பட உள்ளது.
வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்புடைய பொருட்களை குறைந்த விலையில் வாங்க முதற்கட்டமாக பள்ளி ஒன்றிற்கு ரூ. 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
\இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் தண்டாயுதபாணி உட்பட பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *