• May 19, 2024

குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? முதலில் இதை படியுங்கள்…

 குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? முதலில் இதை படியுங்கள்…

தமிழ்நாட்டில் நாளை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. நம்பிக்கையுடன் எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சில நினைவூட்டல்களை தென்காசி மாவட்டம்
சுரண்டை சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி
ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
*தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்குள் சென்று விட வேண்டும். (முடிந்தால் முன்னரே செல்வது சிறப்பு )

  • அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும்
    (ஆதார் அட்டை
    , பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை
    , வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்று)

*தேர்வறையில் மிகவும் கனிவாக நடந்து கொள்ளவும்

*
எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் தேர்வறைக்கு கொண்டு செல்லாதீர்கள்

  • OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும் (தேர்வு தொடங்கும் முன் – 1, முடிந்த பின் – 1), ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression) (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)
    (பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்த பின்னர் OMR-ஐ கையாளவும்)
  • Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade(கருப்பு பேனா) செய்யவும்.
  • தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது. எனவே எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும்.

*A, B, C, D, E – ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 – 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.

*Shade செய்ய கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • நுழைவுச் சீட்டின் அனைத்து பக்கங்களையும் print எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
  • நுழைவுச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடம் பெற்றுள்ள இடத்தில் கையொப்பம் பெற்று நுழைவுச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். (பின்னர் அவசியம் நுழைவு சீட்டு தேவைப்படும்)
  • கைக்குட்டை, தண்ணீர் பாட்டில் அவசியம் எடுத்துச் செல்லுங்கள்.
  • தேர்வறையில் நீங்கள் நல்ல நம்பிக்கையுடன் செலவிடப்போகும் இந்த 3 மணிநேரம் உங்கள் வாழ்வை மாற்றப் போகும் பொன்னான மணித்துளிகள் என்பதை மறவாதீர்கள்
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *