• May 19, 2024

‘தளபதி 66’ இல் விஜய் உடன் சரத்குமார், பிரபு நடிக்கிறார்கள்

 ‘தளபதி 66’ இல் விஜய் உடன் சரத்குமார், பிரபு நடிக்கிறார்கள்

தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் இப்படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் முன்னரே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இணைந்துள்ளதாகவும் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் பிரபு வும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது, விஜய்யின் புலி மற்றும் தெறி படத்தில் பிரபு நடித்து இருந்தார்.

தற்போது மீண்டும் விஜயுடன் இணைய உள்ளார். பிரபு குடும்ப சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இந்நிலையில் இப்படத்தில் பிரபு இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் சரத்குமார், விஜய்க்கு தந்தையாகவும், பிரபு, ராஷ்மிகா மந்தனாவுக்கு தந்தையாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. ஆகையால் தளபதி 66 படத்தில் அதை எப்படியாவது ஈடு செய்து விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த படக்குழு முயற்சி செய்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *