• November 1, 2024

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம்

 இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். தேசிய அகாடமியின் தலைமை ஆலோசகராக வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளார்.

இந்திய அணி நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான டி20 இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனென்றால், இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15-ந் தேதிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி நவம்பர் 10-11-ந் தேதிகளில் புறப்படுகிறது.

கவுதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட வேண்டியிருப்பதால், டி20 அணியுடன் செல்ல முடியாது. இதனால் வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்பட்டள்ளார்.

வி.வி.எஸ்.லட்சுமணன் உடன் சாய்ராஜ் பகதுலே, ஹிஷ்கேஷ் கனித்கர், சுபாதீப் கோஷ் போன்ற கோச்சிங் ஸ்டாப்களும் செல்ல இருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில்., சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *