• May 4, 2024

வேதியியல் விழா: பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

 வேதியியல் விழா: பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் மன்ற நிறைவு விழா மற்றும் வேதியியல் விழா-2024 நடைபெற்றது. துறைத்தலைவர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், சபினுல்லாகான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா மற்றும் இயற்பியல்துறை தலைவர், முஸ்தாக் அஹமது கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பெங்களூரு, ஐபிஎம் பொறியாளர், ராகவன் தேவநாதன்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு தங்க மெடல் வழங்கப்பட்டது.மூன்றாம், ஐந்தாம், ஒன்பதாம் ரேங்க் பெற்ற மூன்று மாணவிகளுக்கும், பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 நிகழ்வினை இணைப்பேராசிரியர் செய்யது அபுதாஹிர் ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் ரேவதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *