• May 18, 2024

ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபரில்  திரைக்கு வருகிறது

 ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபரில்  திரைக்கு வருகிறது

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். லைகா ப்ரொடக்சன்  தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது,.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகில் வெளியாகும் என லைகா நிறுவனம்  தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘ குறி வச்சாச்சு வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.. வேட்டைக்கு தயாராகுங்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *