ஓடும் பஸ்சில் நகை அபேஸ் ; தூத்துக்குடி பெண்கள் 3 பேர் கைது
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது 39). இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் அபேஸ் செய்யப்பட்டது.
நகையை பறிகொடுத்த சுனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். = ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய 3பெண்கள் மீது தங்கு சந்தேகம் இருபதாக அவர் சொல்லி இருந்தார்,.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், மேலும் சுனிதா கூறிய அடையாளங்களை கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்/
இதை தொடர்ந்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்திய போலீசார் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த துாத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பிரியா (எ) தேவயானை (29), நதியா (எ) மாரீஸ்வரி (24), பிரியா (எ) ஈஸ்வரி (25), ஆகிய மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தான் சுனிதாவிடம் இருந்து 7 பவுன் நகையை திருடியது என்பது தெரியவந்தது/. இவர்கள் மூவரும் யாரும் சந்தேகப்படாத வகையில் டிப்டாப் ஆடை அணிந்து பஸ்களிலும், பஸ் ஸ்டாண்டுகளில் நின்று செயின், பர்ஸ் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை உறுதிப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து .3 பெண்களும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.