• May 9, 2024

Month: March 2023

தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரை  பகுதியில் 5 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறை அதிகாரிகள்

கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி ஆமை), அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் […]

செய்திகள்

5 அடுக்கு பாதுகாப்பு: நாளை ஈரோடு கிழக்கு இடைதேர்தல் ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவுக்கான நேரம் மாலை 6 மணிக்கு முடிந்தாலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்து இருந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் முறையாக சீல் வைக்கப்பட்டன. பின்னர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை பெற்றுக்கொண்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனிடையே, மார்ச் 1ம் தேதி காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையில் அளவு குறித்த விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தூத்துக்குடி : 16.5 மி.மீ ஸ்ரீவைகுண்டம் : […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முழுமையாக இயங்க கோரி போராட்டம்

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி கோவில்பட்டி: கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின், பொருளாளர் செல்லத்துரை, காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கூறப்பட்டு இருந்ததாவது:- “கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை […]

கோவில்பட்டி

சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள்

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]

கோவில்பட்டி

கவர்னர் பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவில்பட்டி நகர, தாலுகா குழு சார்பில் நேற்று மாலை பயனியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கவர்னர் ரவி, மார்க்சீயத்தை இழிவாக பேசியதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஜி.பாபு முன்னிலை வகித்தார். நகரர துணை செயலாளர் முனியசாமி,ம அலாவுதீன், ஏ.ஐ..டி.யு.சி.பஞ்சாலை  தலைவர் பரமராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்  உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், ஏ.ஐ..டி.யு.சி மாநில […]