• May 1, 2024
செய்திகள்

‘நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்’- பிரதமர் மோடி

முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்-மந்திரிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு […]

பொது தகவல்கள்

ஏ.சி.யை 26+ டிகிரியில் வைத்து பேன் போடுங்கள்…

தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி ஒருவர், நாம் பயன்படுத்தும் ஏர்கண்டிஷன் பயன்பாடு பற்றி பகிர்ந்துள்ள பயனுள்ள தகவல் வருமாறு:-கோடை வெயில் தொடங்கிவிட்டதால் ஏ.சி.யை அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையை பின்பற்ற வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் ஏ.சி.களை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது. அதாவது, நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும். 23 டிகிரி முதல் 39 […]

செய்திகள்

தேரின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி; ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு , தேர் ஊர்வலம் நடந்தது. இந்த கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இரவு 11.50 மணிக்கு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். 10 அடி தொலைவு தேர் சென்ற நிலையில், தேரின் சக்கரம் ஏறியதில் வாலிபர் ஒருவர் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த […]

செய்திகள்

சர்வ அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேசுவரத்தில் அமைந்து உள்ள ராமநாதர் கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நாட்களில் வழக்கத்தை விட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் இந்த நிலையில் சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் காலை முதலே கடற்கரையில் குவிய தொடங்கி விட்டனர்.கடற்ரைக்கு வந்த பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, கடலில் புனித நீராடினர். பின்னர் ராமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் […]

செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குமரி மாவட்டம் குலசேகரம் திருவட்டார் அருவிக்கரை, பேச்சிப்பாறை, திற்பரப்பு, சுருளோடு, பெருஞ்சாணி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் சுமார் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சிற்றாறு பகுதிகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு […]

செய்திகள்

இலங்கை மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.5௦ லட்சம் உதவி அறிவித்தார் ; மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:- இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண் எண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ரூ. 15 கோடியில் 500 டன் பால் பவுடர்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசியை இலங்கை தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு […]

செய்திகள்

கோவை என்ஜினீயரை மணந்த ஆப்பிரிக்க பெண்; திருமண விழாவில் ருசிகரம்

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன்.இவர் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூன் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூனில் வசிக்கும் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே என்பவருடன் காதல் ஏற்பட்டது. 2 பேரும் தங்களது காதல் விவகாரத்தை இருவரது வீட்டிலும் தெரிவித்து சம்மதம் பெற்றனர். மேலும் வால்மி இனாங்கா இந்தியாவில் திருமணத்தை […]

கோவில்பட்டி

ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போன கோவில்பட்டி பஸ் நிலையம்; பரிதவிக்கும் பயணிகள்

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், மதுரை, திருசெந்தூர், சாத்தூர், சிவகாசி, விளாத்திகுளம் , கழுகுமலை, சங்கரன்கோவில், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, எட்டயபுரம் போன்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் அதிக அளவில் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்,மாணவிகள் , ஆசிரியர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வரு கிறார்கள். இந்த பஸ் நிலையம் கடந்த 2௦17-ம் ஆண்டு ரூ.5 கோடி […]

தூத்துக்குடி

அண்ணன் மகன்கள் 2 பேரை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் ஜோதிமுத்து. இவருடைய மனைவி உஷாராணி. இவர்களது மகன் சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 12).உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் தனது அக்கா வீட்டுக்கு செல்லும்போது, அங்கு இருந்த ஜோதி முத்துவின் தம்பியான லாரி டிரைவர் ரத்தினராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதுகடந்த 2010-ம் ஆண்டு ரத்தினராஜ், மகாலட்சுமியை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். இதனை அறிந்த ஜோதிமுத்து தேடிச் சென்று 2 பேரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.அதன்பிறகு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பால்காரர் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் மணி என்ற சுப்பிரமணி (வயது 45). பால் வியாபாரி. இவர் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சூர்யதிணேஷ் (வயது 24) என்பவரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய […]