• May 19, 2024

ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் கேரட் ஜூஸ்

 ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் கேரட் ஜூஸ்

நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது தான். பல்வேறு தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்க ஹீமோகுளோபின் அளவை சரியாக நாம் உடலில் பராமரித்து வரும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் கேரட் ஜூஸ் எப்படி செய்வது என்பதை இங்கு  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சீரகத்தூள் -1 ஸ்பூன்பால் – ஒன்னரை டம்ளர் நாட்டு சர்க்கரை சிறிதளவு (தேவைப்பட்டால் மட்டும்)

செய்முறை:கேரட்டை எடுத்து சுத்தப்படுத்தி அதை சிறிது சிறிதாக வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும் போது சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் அதன்பிறகு ஏற்கனவே காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள பாலில் இதை கலந்து கொள்ளவும். பின்னர்  சீரகத் தூளை கலக்கவும். தேவைப்பட்டால் இனிப்புக்கு நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளலாம். முடிந்த அளவு சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஜூசை அன்றாடம் குடித்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். அத்துடன் உடல் நீர் ஏற்றத்துடன் இருப்பதால் மேனி மெருகூட்டப்படும். இந்த ஜூசை குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் உங்கள் முகம் பொலிவடைவதை நீங்களே காணலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *