• May 20, 2024

வந்தே பாரத் விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லவேண்டும்; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தல்

 வந்தே பாரத் விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லவேண்டும்; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி-சென்னை இடையே சமீபத்தில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரெயில் கோவில்பட்டியில் நிற்பது கிடையாது. விருதுநகர் நிறுத்தம் இருக்கிறது, கோவில்பட்டி நிறுத்தம் கிடையாது. எனவே  பெரு நகரமாக விளங்கும் கோவில்பட்டியில் வந்தே பாரத் விரைவு ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி மனு அளித்து வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர்  இன்று ரெயில் நிலைய அதிகாரி ரவிக்குமாரை  சந்தித்தனர். சங்க தலைவர் ஆர்.ராஜா என்ற விஜி, துணை தலைவர் எம்.ஜெயபாஸ்கர், செயலாளர் எஸ்.கே.அசோக், துணை செயலாளர் எஸ்.ராஜகுரு, பொருளாளர் ஆர்.சந்தனக்குமார், ஒருங்கிணைப்பாளர் எம்.அசோக்குமார் ,கவுரவ ஆலோசகர்கள் டி.பாலசுந்தரம், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை எம்.சீனிவாசன், எஸ்.சந்திரக்கண்ணன், எஸ்.அழகுலட்சுமணன் மற்றும் லட்சுமி சுவீட்ஸ் கார்த்திக் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது நிலைய அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக ரெயில் வந்தே பாரத் ஆகும்.

வந்தே பாரத் ரெயிலில் ப பயணிப்பதன் மூலமாக பயணிகள் தங்ககளது நேரத்தை மிச்சப்படுத்தலாம். தற்போது தமிழகத்தில் சென்னை-கோவை இடையேயும், சென்னை- பெங்களூர் இடையேயும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

ஒ\இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் கடந்த 24-ந்தேதி அன்று தொடங்கியது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. ,மிக சிறந்த தொழில் நகரமாகும். தீப்பெட்டி, பட்டாசு , கடலை ,மிட்டாய் மற்றும் பஞ்சாலை என பல்வேறு தொழில்களின் மையமாக கோவில்பட்டி உள்ளது.

மேலும் கோவில்பட்டியை சுற்றி உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம், திருவேங்கடம் என அனைத்து பகுதி மக்களும் தொழில் ரீதியாக வந்து செல்ல கோவில்பட்டி ரெயில் நிலையம் உள்ளது.

மதுரை கோட்டத்தில் அதிக லாபம் ஈட்டும் ரெயில் நிலையங்களில் மூன்றாவதாக கோவில்பட்டி ரெயில் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.30 கோடி வரை வருமானம் ஈட்டித்தரும் A கிரேடு அந்தஸ்தில் உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தற்போது இயங்கிக்கொண்டு இருக்கிற திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல மத்திய அரசும், தென்னக ரெயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *