• May 15, 2024

55 ஆயிரம் இலவச நாற்றுகள்; கோவில்பட்டி வனத்துறை ஏற்பாடு

 55 ஆயிரம் இலவச நாற்றுகள்; கோவில்பட்டி வனத்துறை ஏற்பாடு

தூத்துக்குடி வனக்கோட்டம், கோவில்பட்டி வனச்சரகம் – ஊத்துப்பட்டி நாற்றாங்கலில் ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் பருவமழை காலத்தில் விவசாய நிலங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்கள், அரசு நிலங்கள் போன்றவற்றில் நட்டு வளர்க்க 55 ஆயிரம் நாற்றுக்கள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
தேக்கு, செம்மரம், ஈட்டி, வேங்கை, மகோகனி, வேம்பு, புங்கன், நெல்லி, சவுக்கு, வாகை, அலங்கார கொன்றை, இயல் வாகை, புளி, இலுப்பை போன்றவற்றின் நாற்றுகள் தரமான முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இவை, கோவில்பட்டி , எட்டயபுரம், கயத்தார் தாலுகாவில் உள்ள நல்ல நிலம், தண்ணீர் வசதி மற்றும் கால்நடை மேய்ச்சலினால் பாதிப்பு ஏற்படாதவாறு உள்ள பகுதிகளுக்கு அக்டோபர் மாதம் இலவசமாக வழங்கப்படும்.
நாற்றுகள் தேவைப்படுவோர் தற்பொழுது தங்களது நில விபரங்களுடன் தங்களுக்கு தேவையான நாற்றுகள் விபரத்தினை கோவில்பட்டி வனச்சரக அலுவலர் (9843416095) வனவர் (9943291918) ஆகியோருக்கு தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்,
இலவச நாற்றுகள் கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம் தாலுகா பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் – ஏக்கருக்கு அதிக பட்சம் 350 நாற்றுகள் என்ற வகையில் தங்களிடம் இருக்கும் நில அளவுக்கு ஏற்றார் போல நாற்றுகள் வழங்கப்படும் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:- நிலத்தின் ஆன்லைன் பட்டா நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டும்.
மேற்கண்ட தகவல்கள் வனத்துறை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *