• May 19, 2024

Month: May 2022

செய்திகள்

மனைவி பிரசவத்துக்கு சென்றபோது, 2-வது திருமணம்; போலீஸ்காரர் மீது வழக்குபதிவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தராஜா (வயது 28). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கர்ப்பம் அடைந்திருந்தார். வளைகாப்பு முடிந்து மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வெட்டுக்கு சென்று விட்டார். அந்த சமயத்தில் வேறொரு பெண்ணை ஏமாற்றி கருத்தராஜா 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் இது பற்றி அறிந்த 2-வது மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் […]

தூத்துக்குடி

பக்கத்து வீட்டு கதவில் கல் எறிந்து தகராறு செய்தவர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைநகர் பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் முத்து (60) என்பவரின் பக்கத்து வீட்டுக்காரரான முத்தையா மகன் ரூபன் (25) என்பவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து முத்து என்பவரின் வீட்டின் கதவில் கல்லை எறிந்து வந்தார்.இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 13.4.2022 அன்று ரூபன் முத்துவிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் […]

தூத்துக்குடி

ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்

தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் கீலூர் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தாளமுத்துநகர் பொன்சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிரமணியன் (23) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே மேற்படி போலீசார் கந்த சுப்பிரமணியன் […]

கோவில்பட்டி

மே 5: கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டுக்கு விடுமுறை

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5 ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.வணிகர் தினம் அன்று அனைத்து கடைகளையும் அடைத்து விடுவார்கள். மேலும் அன்றைய தினம் வணிகர்கள் பேரவை சார்பில் மாநில அளவிலான மாநாடு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5 ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறதஇதையொட்டி அன்று கடைகளை மூட வணிகர்கள் பேரவை சங்கம்முடிவு செய்துள்ளது. அதன்படி கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.எனவே நாளை 4 ந் […]

தூத்துக்குடி

வீட்டு மேற்கூரை இடிந்து தாய்-கர்ப்பிணி மகள் பலி

தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். மாநகராட்சி தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்(வயது 47) இவர்களது மகள் மகளான காத்தம்மா (எ) கார்த்திகா (21).இவருக்கு திருமணமாகி 9-மாத கர்ப்பிணியான இவரை நேற்று முன்தினம் வளைகாப்பு நடத்தி அண்ணா நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்இன்று(மே 3 ) அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது, தாய், […]

செய்திகள்

மே 4- மாவீரர் திப்பு சுல்தான் நினைவேந்தல் காணொளி நிகழ்ச்சி

மாவீரர் திப்பு சுல்தான் நினைவேந்தல் காணொளி நிகழ்ச்சி 4-ந் தேதி புதன்கிழமை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமக்குடி சக்ஸஸ் அகாடமி செய்துள்ளது. இந்திய விடுதலைப் போரின் முன்னோடியான மைசூரின் புலியென அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் கடந்த 1750 -ம் ஆண்டு நவம்பர் 20 -ம் தேதி பிறந்தார். 1782 -ம் ஆண்டிலிருந்து 1799 -ம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர்.இங்கிலாந்து படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு […]

பொது தகவல்கள்

செஞ்சி கோட்டையின் சிறப்புகள் ..!

தமிழகத்தில் வரலாற்று அதிசயங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் ஒவ்வொருவரும் பார்த்து தெரிந்து கொள்வது அவசியம்.அந்த வகையில் வரலாற்று சின்னமாக விளங்கும் செஞ்சி கோட்டை பற்றி இங்கு பார்க்கலாம். சேதாரம் இருந்தாலும் சிறுகுறையும் இல்லாத தங்க பொக்கிஷம்.. ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள் பலஅடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன.கொடிபறக்க வாழ்ந்த பல கோட்டைகள்…இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. ஆண்டுகள்பல போனாலும் அழகு பதுமையாக காட்சி தரும் ஒருசில கோட்டைகளில்தலைசிறந்த கோட்டையாக விளங்குவது செஞ்சி கோட்டை. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மேற்கே […]

கோவில்பட்டி

நூற்பாலை பெண் ஊழியர் வீட்டில் துப்பாக்கி தோட்டாக்கள்; போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவரது கணவர் இறந்து விட்டார். நூற்பாலையில் வேலைபார்த்து வரும் ஆனந்தவள்ளி அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த வள்ளியிடம், குட்டி பணத்தை திரும்ப கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அந்த சமயத்தில் ஆனந்தவள்ளி வீட்டு சாவியை குட்டி […]

செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தெற்கு தமிழக கடலோர மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதன்படி தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர […]

கோவில்பட்டி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற 68 ஏட்டுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 16.4.1997 அன்று தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்து சிறப்பாக பணியாற்றி வரும் 68 ஏட்டுகளுக்கு சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள 68 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அவர்களின் […]