• May 19, 2024

Month: May 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் துரைப்பாண்டி (வயது 35). இவருக்கு திருமணமாகி தற்போது கோவில்பட்டி ஊரணி பகுதியில் வசித்து வந்தார்.மேலும் அவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று மாலை துரைப்பாண்டி தனது ஆட்டோவில் நண்பர்கள் 4 பேருடன் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் கயத்தாறு அருகே தளவாய்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அவர்கள் அனைவரும் மது அருந்தியதாக தெரிகிறது.அப்போது அவர்களை 4 பேர் சேர்ந்து திடீரென தாக்கினார்கள்/ […]

செய்திகள்

பஸ் நிலையத்தில் மாணவிகள் மோதல்: அதிகாரிகள் அதிரடி உத்தரவு

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவிகள் பஸ் ஏற வந்தனர். அப்போது அந்த மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இந்த நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மோதலில் தொடர்புடைய மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முன்னிலையில் அறிவுரைகள் வழங்கினர். மாவட்ட முதன்மை […]

செய்திகள்

இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் விசாரிக்க கூடாது; டி.ஜி.பி. உத்தரவு

அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் Night custody எனப்படும் இரவு விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னையிலும், திருவண்ணாமலையிலும் விசாரணை கைதி மரணம் அடைந்த விவகாரத்தை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

செய்திகள்

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள்.மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே […]

தூத்துக்குடி

தேசிய அளவிலான பயிற்சி: தூத்துக்குடி பெண் அதிகாரி தங்கப்பதக்கம் வென்றார்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய மாணவர் படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் ஒரு மாதம் நடைபெற்றது. இந்த பயிற்சி அகாடமியில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 112 பேர் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை பெண் அதிகாரி லோலிடா ஜுடு கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) யில் 40 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ருஷ்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கல்லூரி செயலர் புளோரா மேரி அனைவரையும் வரவேற்றுப பேசினார். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை வாசித்தார். துறைத்தலைவர்கள் முன்மொழிய மாணவிகள் தங்களது பட்டச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.விழாவில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் முனைவர் புனிதா தாரணி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ரம்ஜான் தொழுகை

ஏப்ரல் 3-ம் தேதி ரமலான் மாதம் தொடங்கியது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் பிறந்ததும் நோன்பு எனும் உண்ணா விரதமிருந்து இறைவனை நினைத்து தொழுகை நடத்தி வந்தனர்,மே 2ம் தேதி பிறை தெரியும், அன்று ரம்ஜான் கொண்டாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 3ம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இஸ்லாமியர்களின் தலைமை ஹாஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்திருந்தார். ஷவ்வால் பிறை மே 2ம் தேதி தென்படாததால், மே 3ம் […]

தூத்துக்குடி

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ம. பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.9 -ம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய ஏ.டி.எம். திறப்பு

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் 4-வது ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நடைபெற்றது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேஷ்பாண்டியன், வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வங்கியின் ஏ.டி.எம். மையத்தை வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து வங்கியில் புதிய லாக்கர் […]

கோவில்பட்டி

பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா: மே-3 சிறப்பு நிகழ்ச்சிகள்

கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. 11-ந்தே தேதி வரை விழா நடக்கிறது.இன்றைய (மே 3) நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:- 2-வது நாள் மண்டகப்படிதாரர்- நாடார் சாக்கு வர்த்தகர்கள், தரகு, தையல் தொழிலாளர்கள சார்பில் நடக்கிரதுள்.இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் வெள்ளிக்குடை யின் கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் தாமரையுடன் திருமகள் வடிவத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்.இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி […]