• April 27, 2024

வாங்கிய ஒரு மாதத்தில் பழுதானதால், செல்போன் வாங்கியவருக்கு நஷ்டஈடு; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு  

 வாங்கிய ஒரு மாதத்தில் பழுதானதால், செல்போன் வாங்கியவருக்கு நஷ்டஈடு; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு  

தூத்துக்குடி ரத்தினாபுரத்தை சார்ந்த டைட்டஸ் ரோஷன் என்பவர் தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவிலுள்ள செல்போன் விற்பனையாளரிடம் செல்போன் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே செல்போன் பழுதடைந்து விட்டது.

இதை சரி செய்து தரக்கோரி  சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார். அவர்கள் அதைப் பார்த்து விட்டு கடைக்காரர் கொடுத்த IMEI  எண்ணும் மொபைலில் உள்ள IMEI எண்ணும் மாறுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ஒரு மாதம் கழித்து மொபைல் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது எனக் கொடுத்துள்ளார்கள். ஆனால் அது மறுபடியும் சரியாக செயல்படவில்லை. மொபைலின் உற்பத்திலேயே குறைபாடு உள்ளதாலும், IMEI எண் மாறியிருப்பதாலும்  மன உளைச்சலுக்கு ஆளான டைட்டஸ் ரோஷன் ஆளான வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதற்கு  உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட  நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் பழுதான மொபைலுக்கு செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 9,500, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு  நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000;, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 1,000 ஆக மொத்தம் ரூபாய் 29,500 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *