• April 27, 2024

வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியது

 வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தின்  லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியது

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7வது தெருவில்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27ம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமி  ஏ.டி.எம் கதவை  உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்…

பின்னர் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்ற்த்துடன் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து நேற்று நெல்லையை சேர்ந்த வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் மேனேஜர் ஆசீர் நவீன் என்பவர் வந்து பார்த்தபோது ஏடிஎம். மையத்தில்  கொள்ளை முயற்சி நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், ஏடிஎம் இயந்திரத்தில்  ரூ. 10 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் மேனேஜர் ஆசீர் நவீன் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஏடிஎம் மையத்தில் சிசிடிவி  கேமரா உடைக்கப்பட்டு இருந்ததால் தடயம் எதவும் சிக்கவில்லை. இதனால் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து கொள்ளையன் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது சம்பந்தமாக சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *