• April 27, 2024

  என் மகனுக்கு அரசியல் அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

   என் மகனுக்கு அரசியல் அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி,ஜெயக்குமார்சென்னையில்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தி.மு.க.வை வாரிசு அரசியல் என்று சொல்லும்போது உங்கள் மகனும் அரசியலுக்கு வந்துள்ளாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு டி,ஜெயக்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

நல்ல கேள்வியை கேட்டீர்கள்.முன்னிலைப்படுத்துவது என்பது வேறு. உருவாவது என்பது வேறு. 1949 ல் அன்றைக்கு ராபின்சன் பூங்கா,இன்றைக்கு அண்ணா பூங்கா.

திமுக ஆரம்பிக்கும்போது எனது தந்தையும் அதில் உறுப்பினர். என் தந்தையின் அண்ணன் பெயர் பெரியார். அவர் இயற்பெயர் தேசிங்கு. திராவிட கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆனது.

என் தந்தைக்கு அண்ணா சீட் வழங்கினார்.கருணாநிதி சீட் வழங்கவில்லை. 1968 ல்  சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும்போது அப்போது 1வது சட்ட கவுன்சிலராக தேர்வாகி வந்தார். அப்போது அண்ணா, உங்களுக்கு இதுமட்டும் போதாது மண்டல குழு தலைவர் பதவி வழங்கினார். அது மட்டுமல்லாது 1967 ல் ஆட்சியைப் பிடித்த போது புரட்சித்தலைவரை அமைச்சராக்கவேண்டும் என்று தெரிவித்தபோது புரட்சித்தலைவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அப்போது அண்ணா அதற்கு இணையாக அமைச்சர் அந்தஸ்து உள்ளது சிறுசேமிப்பு துணைத்தலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்த பதவியை அளித்தார்..அதில் மாநகராட்சி சார்பில் ஒரு பதவியைப் போடவேண்டும் அந்த பதவிக்கு என் தந்தையின் பெயரை அண்ணா எழுதித் தருகிறார். கருணாநிதியால் கிடையாது. அண்ணாவால்தான் என் தந்தை பதவிகள் பெற்றார்.

அதன்பிறகு என்னை என் தந்தை முன்னிலைப்படுத்தவில்லையே. நானாகப் புரட்சித்தலைவரைச் சந்தித்தேன். எம்.ஜி.ஆர். இளைஞர் அணித்தலைவராக ராயபுரத்தில் பொறுப்பை வழங்கினார். அதன்பிறகு தொகுதி தலைவர் பதவியை அம்மா அளித்தார். அதன்பிறகு 1984 ல் சீட் கேட்டேன் கிடைக்கவில்லை. 1989 ல் கேட்டேன்.இரு முறையும் கூட்டணிக் கட்சிக்குச் சென்றுவிட்டது. அதன்பிறகு 1991 இல் அம்மாவே என்னை நேடியாக  தலைமைக்கழகத்தில் நேர்காணல் வைத்தபோது என்னைத் தேர்வு செய்து ராயபுரத்தில் அடையாளம் காட்டுகிறார்.

அதன்பிறகு 15க்கு மேற்பட்ட துறைகளை எனக்கு அளித்தார். 1991லிருந்து அம்மாவுடன் தொடர்ச்சியாகப் பயணித்துள்ளேன்.நான் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, பேரவைத் தலைவராக இருந்த காலத்திலும் என் மகனுக்கு சீட் கேட்டது கிடையாது. வாரிசு அரசியலை என்றைக்குமே விரும்பாதவர் அம்மா.

ஆனால் சிலர் பொய்யான தகவல்களை அளித்து நான் பேரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது அதன்பிறகு அம்மா அதனை விசாரித்தார்கள்.தவறாகச் சொல்லிவிட்டார்கள் என்று உடனடியாக அந்த குடும்பத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மருத்துவராக இருந்த என் மகனுக்கு சீட் அளிக்கிறார்கள்.

என் மகனை நானா அடையாளம் காட்டினேன். 2017க்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை அம்மாவா அறிவித்தார்.ஓ.பன்னீர்செல்வம் அம்மாவின் காலத்தில் அவர் மகனுக்கு சீட் வாங்கினாரா? அல்லது நான் சீட் கேட்டேனா. அம்மாவால் அரசியல் அடையாளம் காட்டப்பட்டவரை அரசியல் வாரிசு என்று சொல்ல முடியாது

இவ்வாறு டி,ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

8 Comments

  • அருமை அண்ணன் மாவீரர் புரட்சி தலைமகன் அவர்களே மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமே அடையாளமே அஇஅதிமுக கழகத்தின் மூத்த தலைவரே தங்களை போற்றி வணங்குகிறேன். தங்களின் பதிவு அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது வாழ்த்துக்கள்.

  • local dating sites for free online dating match good
    free dating sites connecting singles online members

  • What’s up to every body, it’s my first pay a visit of this web site; this blog contains awesome and actually fine material for
    readers.

  • It’s really very complicated in this busy life to listen news on TV, thus I simply use internet for that purpose, and
    take the most recent news.

  • It’s hard to find experienced people in this particular subject,
    but you sound like you know what you’re talking about!

    Thanks

  • Appreciate this post. Will try it out.

  • I am now not positive the place you are getting your information, but good topic.

    I must spend a while learning much more or working out more.
    Thanks for wonderful information I was searching for this info for my mission.

  • Thank you for some other great article. The place else could anybody get that type of info in such a perfect way of writing?

    I have a presentation next week, and I am at the look for such info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *