• April 19, 2024

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடக்கிறது

 நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடக்கிறது

தமிழ் சினிமா உலகில் பிரபலமாக விளங்கும் நடிகை நயன்தாரா. அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது. நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள். வெளியிடங்களுக்கு இருவரும் ஒன்றாக செல்கிறார்கள். நிறைய கோவில்களுக்கு சென்று கொண்டிருக்கிrறார்கள்.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியிருந்தார். ஆனால் திருமணம் எப்போது என்பதை மட்டும் இருவரும் அறிவிக்கவில்லை.
காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீசின் போது நயந்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், சமீபத்தில் ஷீரடி சென்றுள்ளார்கள். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் ஜூன் 9 ம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதியில் நடக்க இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *