• March 28, 2024

பல் கூச்சம் கர்ப்பத்திற்கான அறிகுறிகளில் ஒன்றா..? நிபுணர்கள் விளக்கம்..!

 பல் கூச்சம் கர்ப்பத்திற்கான அறிகுறிகளில் ஒன்றா..? நிபுணர்கள் விளக்கம்..!

எந்தவொரு பெண்ணுக்கும் கர்ப்பம் அடைவது தங்களது வாழ்நாளில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான காலக்கட்டம் ஆகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, ​​அவளது உடல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மனநிலை மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, வாசனை திறன், மாதவிடாய் தள்ளிப்போதல், மார்பக அசெளகரியங்கள் உள்ளிட்ட பல வகையான அறிகுறிகளை கொண்டு பெண்கள் தங்களது ஆரம்ப கால கர்ப்பத்தை கண்டறியலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

மேற்கூறிய பல அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்றாலும், சில வித்தியாசமான அறிகுறிகளும் பெண்ணுக்கு, பெண் மாறுபட வாய்ப்புள்ளது. சில சமயங்களில், அது கர்ப்பத்தின் அறிகுறிகளா என்பது அவர்களுக்கேத் தெரியாது. பல பெண்கள் வாய் துர்நாற்றம், பல் உணர்திறன், ரத்தம் வடிதல் அல்லது வீக்கம் போன்ற வாய் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். வாய் ஆரோக்கியம் கர்ப்பத்துடன் தொடர்புடையதா? என நீங்கள் ஆச்சர்யப்படலாம். அதற்கான நிபுணர்களின் பதிலை உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம்.

நவி மும்பையில் அமைந்துள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் ஆலோசகராக பணிபுரியும் மருத்துவர் பூஜா வியாஸ் இதுகுறித்து கூறுகையில், “கர்ப்ப காலத்தில் நம் உடல் பல வழிகளில் தன்னை மாற்றிக் கொள்கிறது, ஆனால் பற்களில் கூச்சம் ஏற்படுவது மிகவும் கேள்விப்படாத அறிகுறியாகும். புரோஜெஸ்ட்டிரோன் போன்ற சில ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது ஈறுகளில் வீக்கம் மற்றும் புண்களை ஏற்படுத்தும். இதனால் ஈறுகள் மேலும் மென்மை அடைந்து பற் கூச்சம் மற்றும் காயம் ஏற்பட காரணமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பற்களில் ஏற்படும் கூச்சம் கர்ப்ப கால ஆரம்ப அறிகுறியா?

பல் கூச்சம் என்பது கர்ப்பத்தின் ஆரம்ப கட்ட அறிகுறி அல்ல. கர்ப்பத்தின் 2 மற்றும் 3 வது மூன்று மாதங்களில் இந்த அறிகுறி தோன்றும்.

கர்ப்ப காலத்தில் பல் கூச்சத்தை கையாள்வது எப்படி?

வாய் வழி சுகாதாரத்தை நன்றாக பராமரிப்பது, சீரான மற்றும் குறைவான சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்வது, மருத்துவரிடம் முறையாக பரிசோதித்து கொள்வது ஆகியன பல் கூச்சம் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தை நிர்வகிப்பதற்கும் மேலும் அதைத் தடுப்பதற்கும் உதவும் என பூஜா வியாஸ் தெரிவிக்கிறார்.

கர்ப்பத்தின் சில ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?

மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போவது, காலை சுகவீனம், மார்பக அசௌகரியம், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் உணர்வு, சோர்வு, முதுகு வலி, காலில் தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், மனநிலை மாற்றம், வாயு, வீக்கம் ஆகியன ஆகும்.

2வது மற்றும்3வது மாதத்தில் ஏற்படும் அறிகுறிகள்?

இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களில் பெண்கள் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிப்பதாக மருத்துவர் பூஜா வியாஸ் கூறுகிறார். அவர் கருத்து படி,

* தோல் நிற மாறுதல்

* முகத்தில் பருக்கள் உருவாவது

* வயிற்றில் தழும்பு

* உடல் எடை அதிகரிப்பது

* இடுப்பு, மூட்டு மற்றும் முதுகு வலி

* மூச்சு விடுவதில் சிரமம்

இருப்பினும், கர்ப்பமான பெண் பின்வரும் அறிகுறிகளால் அவதிப்பட்டால், அவள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம்:

* அதிகப்படியான வாந்தி

* இரத்தப்போக்கு

* காய்ச்சல்

* வயிற்றுப்போக்கு

* வயிற்றில் குத்துவது போன்ற வலி

* மங்கலான பார்வை

* மயக்கம் ஆகியன கவனித்தக்க அறிகுறிகள் ஆகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *