• April 25, 2024

வெயிலுக்கு இதமான மாம்பழ லஸ்ஸி… இப்படி செய்து குடித்து பாருங்கள்… சுவை அருமையோ… அருமை…

 வெயிலுக்கு இதமான மாம்பழ லஸ்ஸி… இப்படி செய்து குடித்து பாருங்கள்… சுவை அருமையோ… அருமை…

கோடை வெப்பம் தாக்கும் இந்த காலகட்டத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே, தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகுவதை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல, வெப்பத்தை தாக்குப்பிடிக்க உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது. எனவே, இந்த பருவத்தில் பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்வது அவசியம். அதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் எல்லோருக்கும் பிடித்த மாம்பழ சீசன் ஆரம்பமாகிவிடும்.

எனவே, மாம்பழம் மற்றும் புதினா வைத்து லஸ்ஸி செய்து பருகுவது இன்னும் பிரமாதமாக இருக்கும். இவை இரண்டும் லஸ்ஸியை ஆரோக்கியமானதாகவும், சுவையான பானமாகவும் மாற்றுகின்றன. இந்த மாம்பழம் மற்றும் புதினா லஸ்ஸியை வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 2 (நடுத்தர அளவு)

ஐஸ் க்யூப்ஸ் – 2 கப்

தயிர் – 2 கப்

குளிர்ந்த பால் – 1/2 கப்

புதினா இலைகள் – சிறிதளவு (4 ஸ்ப்ரிக்ஸ்)

தேன் – 1 டீஸ்பூன்

ஆரஞ்சு சாறு – 1/4 கப்

பச்சை ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் மாம்பழம் மற்றும் புதினா இலைகளை குளிர்ந்த நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. அடுத்ததாக மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதனை துண்டுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

3. இப்பொது பிளெண்டரில் துண்டுகளாக வெட்டப்பட்ட மாம்பழம், புதினா சிறிதளவு, தயிர், பால், ஏலக்காய், ஆரஞ்சு சாறு, தேன் மற்றும் ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றை சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.

4. இப்பொது அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதன் மேல் இரண்டு புதினா தலைகளை வைத்து அலங்கரிக்கலாம். அவ்வளவுதான் மேங்கோ மின்ட் லஸ்ஸி ரெடி.

5. நீங்கள் விரும்பினால் லஸ்சியில் மாம்பழ துண்டுகள் மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து கொள்ளலாம்.

மாம்பழத்தில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளன. இவை ஆரோக்கியமான கொலாஜன் உருவாக்கத்திற்கும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. மாம்பழங்களில் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் கண் நோய்களைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.

மாம்பழத்தில் உள்ள இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மாம்பழங்களில் குறைவான அளவில் கலோரிகளும், அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளன. இதனால் இது வயிற்றை நிரப்புவதோடு, வயிறு நிறைந்த திருப்தியை அளிக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *