• April 25, 2024

அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

 அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

அக்னி நட்சத்திர காலத்தில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்தப்பட மாட்டாது. புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இக்காலகட்டத்தில் துவங்கபப்டாது.  மேலும் நமக்கு தெரிந்தது 27 நட்சத்திரங்கள் தான். அது எப்படி வந்தது அக்னி நட்சத்திரம்? … சித்திரை மாத இறுதி வாரத்தில் துவங்கி, வைகாசி முதல் வாரம் வரை சூரியன் உச்சம் பெறும் காலகட்டத்தில் மிக அதிகமாக வெப்பம் பூமியின் மீது விழும். இதைத்தான் கத்திரி வெயில் என்கிறோம். பஞ்சாங்கத்தின் படி பரணி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் துவங்கி, ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை சூரியன் ஆட்சி புரியும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம்.

அக்னி நட்சத்திர காலம்:

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாத முக்கிய விஷயங்கள் உள்ளன. அவைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்…

செய்யக் கூடாதவைகள்

1. உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அத்துடன் நீர் சத்திகள் அதிகமாக இருக்கக்கூடிய நீர் மோர் அதிகம் குடிப்பதும், குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதும்  நல்லது.

2. காலையில் பூஜையின் பொழுது சூரியனுக்குரிய மாக்கோலமிட்டு, சூரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை உச்சரிப்பது மன அமைதியை ஏற்படுத்தும். மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளிப்பது அக்னி நட்சத்திர தோஷம் ஏற்படாமல் காக்கும்.

3. அக்னி நட்சத்திர காலத்தில் விதைகள் விதைக்கபடக் கூடாது. தோட்டம், கிணறு, குளம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடாது. மரம், செடி, கொடிகளை  வெட்டக்கூடாது. அப்படி வெட்டுதல் அதுகமான அனல் காற்று வீசக்கூடும்.

4.  வீடு மற்றும் நிலங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது. முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் போன்ற விழாக்களை செய்யக் கூடாது. ஆனால் அக்னி ஆரம்பிக்கும் முன்னே மொட்டை அடித்துக் கொள்ளலாம்…

5. மேலும் புதிதாக வாங்கிய நிலத்திற்கு பூமி பூஜை போடுவது, கிணறு வெட்டுவது, விவசாய நிலத்தில் புதிய நாற்று நடுவது கூடாது. புதிய வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்வது, பால் காய்ச்சுவது மற்றும் இடமாற்றங்கள் கூடாது.

Also see… Agni Natchathiram | அக்னி நட்சத்திரம் 2022 எப்போது?

செய்ய வேண்டியவைகள்

1. கோயிகளுக்கு செல்வதும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்துவதும் நல்லது. அதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.

2. அக்னி நட்சத்திர காலத்தில் தான – தர்மங்களை செய்யலாம். அத்துடன் இந்த காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்தல், மோர் பந்தல் அமைத்தல் முதலியன செய்தால் இறைவனின் அருள் பெறலாம்.

3.  இந்த காலத்தை கத்திரி வெயில் காலம் என்றும் அழைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த காலத்தில் ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், முடியாதவர்களுக்கும் குடைகள், காலணிகளை வழங்குதல் நல்லது.

4. அத்துடன் அன்னதானமும் செய்தல் சிறந்தது. ஒருவர் மன நிறைவு அடைவது நீர் அருந்திய பின்னரும், உணவருந்திய பின்னரும் தான். அதனை செய்வதால் இறை அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

5. அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம். திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம், பெண் பார்க்கும் படலம் போன்ற நல்ல விஷயங்களை துவங்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *