• April 24, 2024

இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று கட்டாயம் இல்லாதவர்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கி தானம் செய்யுங்கள்

 இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று கட்டாயம் இல்லாதவர்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கி தானம் செய்யுங்கள்

#எண் 1: (1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். சொத்து சார்ந்த விஷயங்களால் முதலீடு செய்யலாம். நண்பர்களுடன் இன்று நேரத்தை செலவிடலாம். இன்று நேர்காணலுக்கு சென்றால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் சகல வசதிகளையும் அனுபவிப்பீர்கள், மேலும் பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது உங்களுக்கு எளிதாக இருக்கும். அதிக வெற்றியை பெற சூரிய பகவான் மற்றும் சந்திரனின் ஆசீர்வாதத்தை பெற மறக்காதீர்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாட்கள் : ஞாயிறு மற்றும் திங்கள்

அதிர்ஷ்ட எண்: 1

தானம்: சூரியகாந்தி எண்ணெயை தானமாக வழங்கலாம்

# எண் 2 (2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடந்தது கொள்ளுங்கள். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடைய வேண்டிய நாள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். முதலீட்டின் மீதான வருமானம் சராசரியாக இருக்கும். மின்னணுவியல், மருந்துகள், ஏற்றுமதி இறக்குமதிகள், சூரிய ஆற்றல், விவசாயம் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றைக் கையாள்வீர்கள் என்றால், உங்களுக்கு லாபம் ஈட்ட ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்று குடிநீர் வழங்குங்கள்

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் குரு மற்றும் தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெற மறக்காதீர்கள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், ஆனால் வழிகாட்டியவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். உங்கள் துணையை ஈர்க்க இது ஒரு சிறந்த நாள். திருமணத்திற்கான பேச்சுகளை இன்று தொடங்கலாம். விளையாட்டு வீரர் பழைய பயிற்சியாளரின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் அல்லது அரசு அதிகாரிகளுக்கு அனுகூலமான நாள். குரு பகவானின் பலத்தை அதிகரிக்க பெண்கள் மஞ்சள் நிற உணவை சமைத்து முழு குடும்பத்திற்கும் பரிமாற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1

தானம்: கோவிலில் சந்தனத்தை தானமாக தரலாம்

# எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் மனதில் குழப்பம் நிறைந்திருக்கும் ஆனால் உங்களுக்கு செல்வம் கூடும். அதிக நிர்வாகம் நிறைந்த நாளாக இன்று இருப்பதால் நிதானமாக இருங்கள். இன்று முதலீடு செய்யப்படும் பணம் ரகசியமாக இருக்க வேண்டும். ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதில் பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டும். ஏற்றுமதி இறக்குமதியைக் கையாள்வதில் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகள் ஒரு உணர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தும், மேலும் இது யாரையாவது காயப்படுத்தக்கூடும், எனவே தகவல்தொடர்புகளில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம்

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

# எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வையுங்கள். உங்கள் சுதந்திரத்தை நியாயமற்ற முறையில் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகமானவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமம் கவனமாக இருக்கவும். ஃபேஷன், கட்டுமானம், ஊடகம், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் விளையாட்டு ஆகிட துறையில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும். இன்றைக்கு மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இன்று விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை

அதிர்ஷ்டமான நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை தானமாக வழங்குங்கள்

# எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று நீங்கள் மிக அழுத்தமாக உணர கூடிய நாள். எனவே மனதை

தயார்படுத்தி கொள்ளுங்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். கூட்டங்கள், டீலிங், ஹோஸ்டிங், மார்க்கெட்டிங் மற்றும் அலுவலகத்தில் நேர்காணல்கள் ஆகியவை சிறப்பாக நடக்கும். அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருக்கும். ஆடைகள், நகைகள், வாகனங்கள், மொபைல், வீடு வாங்குவதற்கும் அல்லது சிறிய பயணத்தைத் திட்டமிடுவதற்கும் இன்று சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறங்கள் :அக்வா

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: வெள்ளை நாணயத்தை தானமாக கொடுங்கள்

# எண் 7 ( 7, 16 தேதிகளில் பிறந்தவர்கள் )

வக்கீல்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். எனவே இன்று ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும். வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை நீக்க இன்று ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். புதியதை ஏற்றுக்கொள்ள உங்கள் மனதைத் தயார் படுத்துங்கள். மென்பொருளுடன் தொடர்புடைய வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக முடியும். திருமண முயற்சிகள் இன்று புறக்கணிக்கப்படும். சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 7

தானம்: கோவிலில் மஞ்சள் காசை தானமாக கொடுங்கள்

# எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று வெற்றிக்கான அனைத்து கதவுகளும் திறக்கும். இன்று உங்கள் அறிவு மற்றும் பணத்தின் பலத்தைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு உள்ள சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இன்று வணிக ஒப்பந்தங்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். இன்றைய நாள் செழிப்பாக இருக்க நேரத்தை சரியான முறையில் செலவிடுங்கள். நீங்கள் உயர்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ன்று வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

# எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களுக்கு புகழ் கிடைக்கும். தம்பதிகள் எதிர்காலத்தைத் திட்டமிட ஒரு அழகான நாள். அரசு டெண்டர்கள், சொத்து ஒப்பந்தங்கள், பாதுகாப்பு படிப்பு, மருத்துவ படிப்புகள் சுமுகமாக கையெழுத்தாகும். ஃபேஷன், மென்பொருள், அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் பிரபலமாவீர்கள். இளம் அரசியல்வாதிகள் மற்றும் இளம் கலைஞர்கள் இன்று சில புதிய பதவிகளை பெறுவீர்கள். நேர்காணல், போட்டித் தேர்வுகளை வழங்க இந்த நாளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இசைக்கலைஞர்களின் பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். இன்று உங்களின் பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

ஏப்ரல் 28 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சமந்தா அக்கினேனி, ஷர்மன் ஜோஷி, மதுசூதன் தாஸ், நிகில் அத்வானி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *