• April 25, 2024

இன்று சித்திரை மாத பிரதோஷம்… உணவு தானம் வழங்கினால் தோஷம் நீங்கும்!

 இன்று சித்திரை மாத பிரதோஷம்… உணவு தானம் வழங்கினால் தோஷம் நீங்கும்!

பங்குனி மாதத்தை போலவே பல கோயில்களில் இறைவனுக்கு விழாக்களும், வைபவங்களும் செய்யப்படுகின்ற ஒரு மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதிக்கு பிறகு வரும் தேய்பிறை காலத்தில் வரும் ஒரு அற்புத தினம் சித்திரை தேய்பிறை பிரதோஷம். இந்தப் சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வழிபடும் முறை

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி, சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.

பலன்கள்

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழகிழமையான இன்று வரும் பிரதோஷத்திற்கு கோவிலுக்கு சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்க வேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் சித்திரை தேய்பிறை பிரதோஷமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு செய்த பாவங்களுக்கான கர்ம வினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கல்வி, தொழில் போன்றவற்றில் மேன்மையான நிலை ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் தோன்றும்.

மேலும், இந்த நாளில் நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *